Advertisment

இத்தனை நகரங்களில் ஏர்டெல், ஜியோ 5ஜி சேவை.. நெட்வொர்க் கவரேஜ் முழு விவரம் இங்கே!

Airtel and Jio 5G network coverage in India: ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றம் ஜியோ ட்ரூ 5ஜி பற்றின முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
இத்தனை நகரங்களில் ஏர்டெல், ஜியோ 5ஜி சேவை.. நெட்வொர்க் கவரேஜ் முழு விவரம் இங்கே!

இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முதற்கட்டாக

தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவையை வழங்கின. தற்போது தங்களது நெட்வொர்க் கவரேஜை விரிவுபடுத்தி வருகின்றன. இப்போது இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும்.

Advertisment

5ஜி பயன்படுத்த 5ஜி பயன்படுத்த புதிய சிம் வாங்கத் தேவையில்லை. உங்கள் பகுதியில் 5ஜி கிடைத்தவுடன், உங்கள் போன் 5ஜி ஆதரவு கிடைத்தவுடன் மொபைல் நெர்வோர்க் செட்டிங்கிஸ் மாற்றம் செய்து 5ஜி பயன்படுத்தலாம். சில ஸ்மார்ட்போன்களில் நேரடியாகவும், சில ஸ்மார்ட்போன்களில் சாப்ட்வேர் அப்டேட்டுடனும் 5ஜி பயன்படுத்தலாம். ஜியோ இலவச 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. 5ஜி ரீசார்ஜ் திட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தவில்லை. அதேபோல் தான் ஏர்டெல் நிறுவனமும் 5ஜி ரீசார்ஜ் திட்டங்களை இன்னும் அறிமுகம் செய்யவில்லை.

ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் ஸ்டேண்ட் அலோன் 5ஜி (standalone 5G) சேவையை வழங்குகிறது. அதேநேரம் ஏர்டெல் நான்- ஸ்டேண்ட் அலோன் 5ஜி சேவையை (non-standalone 5G) வழங்குகிறது.

ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) நெட்வொர்க் கவரேஜ்

ஜனவரி 10-ம் தேதி நிலவரப்படி, ஜியோ 5G நெட்வொர்க் நாடு முழுவதும் 72 நகரங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக அக்டோபர் 4-ம் தேதி டெல்லி, மும்பை, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் சேவை வழங்கப்பட்டது.

அக்டோபர் மாதத்திலேயே சேவை விரிவுபடுத்தப்பட்டது. நாத்வாரா மற்றும் சென்னை பகுதிகளில் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், நொய்டா, காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் ஜியோ தனது 5ஜி நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜியோ 5ஜி நவம்பர் மாதம் புனேவிலும் குஜராத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைத்தது. அதன்பின் கொச்சி, விஜயவாடா, விசாகப்பட்டினம், குண்டூர், லக்னோ, திருவனந்தபுரம், மைசூரு, சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார், டெராபஸ்ஸி, போபால், இந்தூர் போன்ற நகரங்களில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர், ஜனவரி 2023 முதல் வாரத்தில், ஜியோ ட்ரூ 5ஜி புவனேஸ்வர், கட்டாக், ஜபல்பூர், குவாலியர், லூதியானா மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களுக்கு சேவை வழங்கியது. ஜனவரி 9 முதல் ஆக்ரா, கான்பூர், பிரயாக்ராஜ், மீரட், திருப்பதி, நெல்லூர், கோழிக்கோடு, திருச்சூர், நாக்பூர் மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களிலும் தற்போது சேவை வழங்கப்படுகிறது.

ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) நெட்வொர்க் கவரேஜ்

ஏர்டெல் தனது 5ஜி பிளஸ் நெட்வொர்கை முதலில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் அக்டோபர் 6-ம் தேதி அறிமுகப்படுத்தியது. நவம்பர் 2022 இல், ஏர்டெல் தனது 5G நெட்வொர்க்கை கவுகாத்தி, குருகிராம், பானிபட், புனே விமான நிலையம், வாரணாசி விமான நிலையம், பாட்னா, நாக்பூர் விமான நிலையம் மற்றும் பெங்களூரு விமான நிலையம் போன்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தியது.

டிசம்பரில், லக்னோ, சிம்லா, இம்பால், அகமதாபாத், காந்திநகர், விசாகப்பட்டினம், புனே, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் சேவை வழங்கியது. ஜனவரி 2023இல் ஏர்டெல் 5G பிளஸ் நெட்வொர்க் ஹரியானா மற்றும் இந்தூரில் கிடைத்தது. ஜனவரி 6-ம் தேதி ஹிசார் மற்றும் ரோஹ்தக் ஆகிய இடங்களிலும் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Jio Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment