scorecardresearch

கிரிக்கெட் பிளான் உடன் அமேசான் பிரைம் சந்தா இலவசம்: ஏர்டெல் புதிய திட்டம் என்ன?

ஏர்டெல் கிரிக்கெட் திட்டங்களுடன் இப்போது அமேசான் பிரைம் மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

Airtel revamps prepaid plans
ஓடிடி தளங்களை இனி இலவசமாக பார்க்க முடியும்

ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த கிரிக்கெட் திட்டம் முன்னதாக, டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது அமேசான் பிரைமிக்கு வழங்கப்படுகிறது.

தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலிருந்து அமேசான் பிரைமுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்ட்ரீமிங் உரிமம் மாற்றப்பட்டுள்ளதால் ஏர்டெல் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் கிரிக்கெட் திட்டங்கள்

ஏர்டெல் ரூ. 2999 திட்டம்

ஏர்டெல் ரூ. 2999 திட்டமானது வருடாந்திர கிரிக்கெட் திட்டமாகும், இது 365 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், 1 நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் ஃபாஸ்ட் டேக் (FASTag) ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக் போன்ற நன்மைகள் உள்ளன. இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.3359 திட்டம்

ஏர்டெல் ரூ.3359 வருடாந்திர திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2.5ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வசதி உள்ளது. அதோடு இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ. 999 திட்டம்

999 திட்டமானது 84 நாட்கள் அதாவது மூன்று மாதங்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இதில் பயனர்கள் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி உள்ளது. அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ.699 திட்டம்

ரூ.999 திட்டத்தைப் போலவே, ரூ.699 கிரிக்கெட் திட்டமும் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் பயனர்கள் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பெறுவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Airtel cricket plans now come with amazon prime mobile subscription check details