ஏர்டல் நிறுவனமானது தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.
இந்த ஆஃபர் மூலம் ரூ.399 என்ற ப்ளானில் தினமும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அனைத்து நெட்வொக் எண்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்.டி.டி கால்களை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த ஆஃபரானது 4 ஜி சிம் மற்று 4ஜி ஹேண்ட்செட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜியோ வழங்கும் ரூ.399 ப்ளானை போலவே ஏர்டெல்லும் இந்த ஆஃபரை அறிவித்துள்ளது குறிபிடத்தக்கது.
இதேபோல, ஏர்டெல் ரூ.244-க்கு மற்றொரு ஆஃபரையும் வழங்குகிறது. அந்த ஆஃபரில் தினமும் 1ஜி.பி டேட்டாவை 70 நாட்கள் வேலிடிட்டியில் பெற முடியும். அதோடு, ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க்கிற்கு அன்லிமிடட் கால்ஸை இலவசமாக பெற முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ வருகையை அடுத்து மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதனையொட்டி, ஏர்டெல் உள்பட பல்வேறு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள புதிய ஆஃபரை வழங்கி வருகின்றன. சமீபத்தில் ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஜியோபோனை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 50 கோடி ஃபீச்சர் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை தன்பக்கம் இழுக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.