ஏர்டெல் நிறுவனமானது தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, பயன்படுத்தப்படாத டேட்டா-வை இனி அடுத்த மாதத்திலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் மாதந்திர டேட்டாவை குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றிருந்தது. அந்த மாதத்திற்கான டேட்டாவை அந்த மாதத்திற்குள்ளாக பயன்படுத்தாவிட்டால், அது காலாவதியாகும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டா-வை அடுத்த மாதத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது. குறிப்பிடும்படியாக 1000 ஜி.பி வரை பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த மாத கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுளளது. ஏர்டெல் நிறுவனமானது தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கடந்த ஜூலை மாதம் இதுபோன்ற சலுகையை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பார்த்தி ஏர்டெல், தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் மாதென் கூறும்போது: தலைசிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, வாடிக்கையாளர்கள் தங்களது பயன்படுத்தப்படாத டேட்டா குறித்து கவலைபடத் தேவையில்லை. ஏனெனில், தற்போது அந்த டேட்டா-க்கள் எப்போதும் அவர்களுக்கே சென்றடையும் என்று குறிப்பிட்டார்.
ஏர்டெல் வி-ஃபைபர் சேவையானது தற்போது 87 நகரங்களில் உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், ஏர்டெல் நிறுவனமானது ரூ.999, ரூ.1099, ரூ.1299 மற்றும் ரூ.1999 போன்ற ப்ளான்களை வழங்குகிறது. பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த மாதத்தித்தில் பயன்டுத்தப்படும் டேட்டா ரோல்-ஓவர் சலுகையானது ரூ.999 ப்ளானில் இல்லை என ஏர்டெல் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.