ஏர்டெல் நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்-கான குறைந்தபட்ச கட்டணத்தை 57% உயர்த்தி ரூ.155 ஆக புதிய கட்டணம் நிர்ணயித்துள்ளது. முன்பு இந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.99 ஆக இருந்தது. எனினும் இந்த புதிய கட்டணம் ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏர்டெல் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாகும். இந்தியாவில் 5ஜி சேவை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல் 8 மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை வழங்கி வருகிறது. ஏர்டெல் 2-வது பெரிய முன்னணி நிறுவனமாக உள்ளது. மொபைல் சேவை, பிராட் பேண்ட் சேவைகளையும் வழங்குகிறது. இந்நிலையில், ப்ரீபெய்ட் ரீசார்ஜ்-கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம், 28 நாட்கள் வேலிடிட்டி, 200 ஜிபி டேட்டா மற்றும் காலிங் வசதி நிமிடத்திற்கு ரூ.2.5 பைசா விகிதத்தில் வசூலிக்கப்பட்டது. இத்திட்டத்தை ஏர்டெல் நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.155 திட்டம்
ஹரியானா மற்றும் ஒடிசாவில் புதிய ரூ.155 திட்டமானது, அன்லிமிடெட் காலிங் வசதி,
1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்.எம்.எஸ்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் மட்டுமே.
நிறுவனம் புதிய திட்டத்தின் சோதனையைத் தொடங்கியுள்ளது, அதன் முடிவின் அடிப்படையில் இந்தியா முழுவதும் இதை செயல்படுத்த வாய்ப்புள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
ஏர்டெல் முதலாவதாக இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இது மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களில் இருந்து எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.
குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.155 என நிர்ணயிக்கப்பட்டால் அதற்கு கீழ் தற்போது உள்ள 3 திட்டங்கள் ரூ.99 (28 நாட்கள்), ரூ.109 (30 நாட்கள் ) மற்றும் ரூ.111 ( 1மாதம்) திட்டங்கள் நிறுத்தப்படும்.தற்போது ஹரியானா மற்றும் ஒடிசா தவிர மற்ற மாநிலங்களில் இந்த திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil