இந்தியாவில் 5ஜி சேவை கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் தங்கள் சேவையை விரிவுபடுத்தி வருகின்றன. அந்தவகையில் ஏர்டெல் சமீபத்தில் தனது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணம் இன்றியும் அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் பகுதியில் வசிக்கும் ஏர்டெல் பயனர்கள் தங்கள் 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போன்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலவசமாக பயன்படுத்த முடியும். இந்தச் சலுகை ரூ.239 மற்றும் அதற்கு மேல் செயலில் உள்ள டேட்டா திட்டங்களுக்கும் பயன்படும்.
இந்தநிலையில் ஏர்டெல்லின் சில குறிப்பிட்ட திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவையும் வழங்கப்படுகிறது. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.399 திட்டம்
ரூ.399 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் இலவச காலிங் வசதி. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2.5 ஜிபி தினசரி டேட்டா உடன் வருகிறது.
ஏர்டெல் ரூ.499 திட்டம்
அதிக டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 திட்டம் சரியான தேர்வாகும். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற காலிங் வசதி வழங்குகிறது. அதோடு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற கூடுதல் பலன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இதேபோன்று ஏர்டெல் ரூ.839 திட்டம் மற்றும் ரூ.3359 திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. உங்கள் பகுதியில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை கிடைக்கிறது என்றால் மேற்குறிப்பிட்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்து ஐ.பி.எல் சீசனை கொண்டாடுங்கள். ஏர்டெல் தற்போது 500க்கும் அதிகமான பகுதிகளில் 5ஜி சேவையை வழங்கிவருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil