Advertisment

1 வருடத்திற்கு நோ ரீசார்ஜ்; 2 ஓ.டி.டி சலுகைகள், அன்லிமிடெட் வசதிகள்: ஏர்டெல்லின் மொபைல் திட்டம் என்ன?

அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி சலுகைகளுடன் ரூ.999 விலையில் ஏர்டெல் போஸ்ட்பெஸ்ட் திட்டத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel

Airtel

பாரதி ஏர்டெல் இந்தியாவில் மிகப்பெரிய 4ஜி மொபைல் நெட்வொர்க்குகளில் ஒன்றாக உள்ளது.தற்போது நாடு முழுவதும் 5ஜி சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் புதிய போஸ்ட்பெஸ்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற பல OTT (ஓவர்-தி-டாப்) சலுகைகளுடன் 100ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் வசதிகள் வழங்கப்படுகிறது.

Advertisment

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்

பார்தி ஏர்டெல்லின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம் 100ஜிபி டேட்டாவுடன் வருகிறது. அதோடு அன்லிமிடெட் காலிங் வசதிகள், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்குகிறது. 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் 1 பிரைமரி இணைப்பு மற்றும் 3 கூடுதல் இணைப்புகள் (Add on connections) வழங்கப்படுகின்றன. Add on இணைப்புகள் ஒவ்வொரு மாதமும் 30ஜிபி பெறுகின்றன.

எனினும் இந்த போஸ்ட் பேஸ்ட் திட்டத்தில் வரி செலுத்த வேண்டும். ஏர்டெல் ரூ.999 திட்டத்தின் இறுதி பில் கிடைக்கப்பெறும் போது வரி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

சலுகைகள்

ஏர்டெல்லின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி 6 மாத அமேசான் பிரைம் வீடியோ, ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் எடிசன், எக்ஸ் ஸ்ட்ரீம் மொபைல் பேக் மற்றும் விங்க் பிரீமியம் ஆகியவற்றை பெறுவீர்கள்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment