Airtel Rs.199 prepaid plan announced| ஏர்டெல் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் ஏர்டெல் தனது சேவையை வழங்கி வருகிறது. முதற்கட்டமாக 8 மெட்ரோ நகரங்களில் சேவையை வழங்குகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பிரீபெய்டு (prepaid) மற்றும் போஸ்ட்பெய்டு (postpaid) என 2 முறையில் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஏர்டெலில் 100 ரூபாயில் இருந்து மாதாந்திர திட்டம் உள்ளது. இந்த நிலையில், ரூ.199-க்கு ஒரு புதிய திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சமாக இந்த திட்டத்தில் 30 நாள் வேலிடிட்டி (validity) வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.199 புதிய திட்டம்
ஏர்டெல் ரூ.199 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 3GB மொத்த டேட்டாவுடன் வருகிறது. அன்லிமிடெட் காலிங் வசதி உள்ளது. மேலும் 30 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.
இருப்பினும் அரசு விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மட்டுமே
பயன்படுத்த முடியும். பொதுவாக ஏர்டெல் 1 மாத திட்டத்தில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கப்படும்.
திட்டத்தின் பிற நன்மைகள்
இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் Wynk மியூசிக் வழங்கப்படுகிறது. பயனர்கள் 300 எஸ்.எம்.எஸ் வரம்பை கடந்து விட்டால் எஸ்.எம்.எஸ் ஒன்றுக்கு ரூ. 1 கட்டணமாக வசூலிக்கப்படும். அதே சமயம் 3ஜிபி டேட்டா வரம்பை கடந்தால் ஒரு எம்பிக்கு 50பைசா வசூலிக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள், மீண்டும் அடுத்த மாதம் இதே திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும், நீங்கள் பயன்படுத்தாமல் வைத்த எஸ்.எம்.எஸ், டேட்டாவை அடுத்த முறை பயன்படுத்த முடியாது.
வைஃபை பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். அதிக டேட்டா பயன்படுத்தாதவர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil