ஏர்டெல் ஸ்பெஷல் ரீசார்ச் ஆஃபர்: 360 நாட்கள் வேலிடிட்டியில் 300 ஜி.பி டேட்டா + அன்லிமிடெட் கால்ஸ்!

360 நாட்கள் வேலிடிட்டியில் ஏர்டெல் ரூ.3999 ப்ளான்

தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இடையே நிலவிவரும் போட்டி காரணமாக, ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோ-வின் வருகை தான்.

இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனமானது ரூ.3999 என்ற ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது. 360 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானில் 300 ஜி.பி டேட்டாவுடன், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ் வழங்கப்படுகின்றன. பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆஃபரை வழங்கும் நிலையில், இலவச ரோமிங் அவுட்-கோயிங் கால்ஸ் மற்றும் நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றையும் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.999 ப்ளான்

 • ரூ.999 ப்ளானில் 60 ஜி.பி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது.
 • அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ் (non-commercial use)
 • இந்தியாவிற்குள் இலவச அவுட்-கோயிங் ரோமிங் கால்ஸ்.
 • நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ்-கள்

எர்டெல் ரூ.1,999 ப்ளான்

 • 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1,999 ப்ளானில், 125 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.
 • அன்லிமிடெட் லோக்கல்+எஸ்.டி.டி கால்ஸ்
 • இந்தியாவிற்குள் இலவச ரோமிங் கால்ஸ்
 • நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ்

ஏர்டெல் ரூ.3,999 ப்ளான்

 • 360 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானில் 300 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.
 • அன்லிமிடெட் லோக்கல்+எஸ்.டி.டி கால்ஸ்
 • இந்தியாவிற்குள் இலவச ரோமிங் கால்ஸ்
 • நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ்
×Close
×Close