இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகியவை முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களாக இருந்து வருகின்றன. இந்நிறுவனங்கள் தங்களது பயனர்களின் வசதிக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளன. அன்லிமிடெட் காலிங், டேட்டா வசதி, கூடுதல் சலுகைகளாக ஓ.டி.டி தளங்களுக்களான இலவச சந்தா ஆகியவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், இந்நிறுவனங்கள் வழங்கும் ரூ. 200 கீழ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ அன்லிமிடெட் அழைப்புகளுடன் 149 ரூபாயில் குறைந்த விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. 20 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி அதிவேக மொபைல் டேட்டாவை வழங்குகிறது. அடுத்தது ரூ.179 திட்டமானது 24 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், 1 ஜிபி மொபைல் டேட்டாவுடன் வருகிறது.
28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் பிற சேவைகளுக்கான திட்டங்கள் ரூ. 209-யில் இருந்து தொடங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து திட்டங்களும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற நிலையான ஜியோ பயன்பாடுகளுக்கான அனுமதி உள்ளது.
ஏர்டெல்
நீங்கள் ஏர்டெல்லில் அன்லிமிடெட் காலிங் வசதி கொண்ட குறைந்த விலை திட்டத்தை பெற விரும்பினால் ரூ.155 திட்டம் உங்களுக்கு பிடிக்கும். இந்த திட்டத்தில், மாதத்திற்கு 1ஜிபி மொபைல் டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். இது 24 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ரூ.179 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங்,
300 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ, 200 கீழ் பட்டியலில் ஏர்டெல் ரூ.199 திட்டத்தை வழங்குகிறது. இது 30 நாட்கள் வேலிடிட்டி. அன்லிமிடெட் காலிங்,
300 எஸ்எம்எஸ் மற்றும் இது 3 ஜிபி மொபைல் டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் இலவசமாகப் பெறலாம்.
வோடபோன்
வோடபோன் ஐடியாவில் அன்லிமிடெட் அழைப்புகளுடன் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் ரூ. 149-இல் வழங்கப்படுகிறது. இது 21 நாட்கள் வேலிடிட்டி பெறுகிறது. 300 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி மொபைல் டேட்டாவுடன் வருகிறது. அடுத்து ரூ.155 திட்டம். அதே சலுகைகள் ஆனால் 24 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ரூ.179 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி மொபைல் டேட்டாவுடன் வருகிறது. இதில் வோடபோன் ஐடியா செயலியைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெறலாம்.
அதிக டேட்டா வசதி மற்றும் ஒரு மாத வேலிடிட்டி திட்டம் ரூ.195 வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி மொபைல் டேட்டாவை வழங்குகிறது. மேலே குறிப்பிட்டது போல் வோடபோன் ஐடியா செயலியைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி டேட்டா கூடுதலாக பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/