அதிரடி ஆஃபர்களை அறிவித்த ஏர்டெல்: மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

இதனிடையே, ஏர்டெல்லின் மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர குறைந்த விலையில் அதிக சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் டேட்டா ஆஃபர் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது.

ரூ.199, ரூ.349, ரூ.399, ரூ.53, ரூ.60, ரூ.88, ரூ.90 ஆகிய தொகைகளுக்கு சிறப்பு ஆஃபர்களை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விவரங்களின் விவரங்கள் இதோ:

1. ரூ.399 பேக் – 1.ஜி.பி./ஒருநாள், அன்லிமிடெட் வாய்ஸ் (70 நாட்கள் வேலிடிட்டி)

2. ரூ.349 பேக் – 1 ஜி.பி./ஒருநாள், அன்லிமிடெட் வாய்ஸ் (28 நாட்கள் வேலிடிட்டி)

3. ரூ.199 பேக் – 1.ஜி.பி., அன்லிமிடெட் வாய்ஸ் (28 நாட்கள் வேலிடிட்டி)

4. ரூ.90 பேக் – ரூ.88 டாக் டைம் (அன்லிமிடெட் வேலிடிட்டி)

5. ரூ.60 பேக் – ரூ.53 டாக் டைம் (அன்லிமிடெட் வேலிடிட்டி)

இதனிடையே, ஏர்டெல்லின் மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close