அமேசான் பிரைம் லைட் வருடாந்திர சந்தா திட்டம் ரூ.999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான பிரைம் மெம்பர்ஷிப் திட்டதை விட குறைவாகும். இந்தத் திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட ஆர்டர்களுக்கு இலவச டெலிவரி மற்றும் அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு தள்ளுபடி பெறுலாம்.
அமேசான் பிரைம் லைட் சந்தாதாரர்கள் அமேசான் பே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் அமேசான் தளத்தில் (Amazon.in) தளத்தில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 5% தள்ளுபடியைப் பெறலாம். 2% கேஷ்பேக் பெறலாம்.
பிரைம் லைட் பயன்பாடு
அமேசான் பிரைம் லைட் வழக்கமான பிரைம் மெம்பர்ஷிப் திட்டத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. குறைந்த விலை, சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அமேசான் பிரைம் வீடியோ உடன் அமேசான் இலவச டெலிவரி மற்றும் சில சலுகைகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
அமேசான் பிரைம் லைட் திட்டத்தில் ஒரே நேரத்தில் 2 பேர் அல்லது 2 சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். HD தரத்தில் மட்டுமே வீடியோகளைப் பார்க்க முடியும்.
அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா திட்டம் ஆண்டுக்கு ரூ.1,499 ஆகும். இதை விட பிரைம் லைட் சந்தா ரூ.500 குறைவாக வழங்கப்படுகிறது. எனினும் Amazon Music, Prime Reading, Prime Gaming மற்றும் Prime Advantage பலன்களை இதில் பெற முடியாது. அமேசான் பிரைம் லைட் 1 மாதம் மற்றும் 3 மாத சந்தாக்களையும் வழங்குகிறது. 1 மாத சந்தா ரூ.299, 3 மாத சந்தா ரூ.599க்கு வழங்குகிறது.