அமேசான் “கிரேட் இன்டியன் பெஸ்டிவல்” வரும் அக்டோபர் 14-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆன்லைன் வணிகதளமான அமேசான் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு தள்ளுபடி விற்பனையை அறிவித்தவாறு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பெரும்பலானோர் ஷாப்பிங் செய்ய திட்டமிட்டிருப்பர். அதனை கருத்தில் கொண்டே இந்த தள்ளுபடியை அமேசான் அறிவித்துள்ளதாக தெரிகிறது. எஸ்.பி.ஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் ஆஃபர் உள்ளது.
அக்டோபர் 14-ம் தேதி 17-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தள்ளுபடி விற்பனையின்போது, அமேசான் பே-பேலன்ஸ் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு ரூ.500 வரை கேஷ் பேக் ஆஃபர் உள்ளது. அதேநேரத்தில், மொபைல் போன்களுக்கு 40 சதவீத தள்ளுபடியும், லேப்டாப் போன்றவற்றிற்கு ரூ.20,000 வரை தள்ளுபடியும் மற்றும் ஹெட்போன், ஸ்பீகர்கர்ஸ் ஆகியவற்றிற்கு 60 சதவீத தள்ளுபடி என பல்வேறு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன்களுக்கான ஆஃபரை பொறுத்தவரையில், 40 சதவீத தள்ளுபடியுடன், நோ-காஸ்ட் இ.எம்.ஐ வசதியும் உள்ளது. மேலும், குறிப்பிட்ட நிறுவனங்களின் மொபைல் போன்களுக்கு, வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆஃபரை வழங்குகின்றன. அதன்படி, ஒன்ப்ளஸ் 5, கூல்பேட் கூல் 1 போன்ற போன்களை வாங்குபவர்களுக்கு 75 ஜி.பி 4ஜி டேட்டாவை வழங்குகிறது வோடபோன் நிறுவனம். இதேபோல, நுபியா எம்2 லைட், ஹானர் 6எக்ஸ், நுபியா இசட்11 உள்ளிட்ட போன்களை வாங்குபவர்களுக்கு 64 ஜி.பி டேட்டாவை ஐடியா வழங்குகிறது. மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ், மோட்டோ ஜி5 ப்ளஸ், ரெட்மி 4ஏ, சாம்சங் ஆன் 7 புரோ, போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோ ஆஃபர் உள்ளது. ஜியோ ஆஃபரில் 90 ஜி.பி கூடுதல் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
பவர்பேங்க்ஸ்-களுக்கு 65 சதவீதம் வரையிலான தள்ளுபடியும், மொபைல் கேஸஸ்களுக்கு 80 சதவீதம் வரையிலான தள்ளுபடியும், ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு 20 சதவீதம் வரையிலான தள்ளுபடிம் வழங்கப்படுகிறது. குறிப்பிடும்படியாக, இந்த தள்ளுபடி விற்பனை நாட்களின்போது, அமேசான் ஆப்-ல் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை “கோல்டன் ஹவர்ஸ் டீல்” நடைபெறுகிறது.