scorecardresearch

Amazon India Black Friday sale 2022: டிவி, இயர் போன், ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு ஆஃபர்

அமேசான் இந்தியா Black Friday விற்பனையில் டிவி, ஈயர் போன், ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

Amazon India Black Friday sale 2022: டிவி, இயர் போன், ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு ஆஃபர்

அமேசான் இந்தியா Black Friday விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்தாண்டிற்கான விற்பனை தொடங்கியுள்ளது. இதில் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஸ்மார்ட் டிவி, ஈயர் போன், ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். பட்ஜெட்டில் எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்க நினைத்தால் இப்போதே வாங்கிவிடுங்கள்.

இருப்பினும் ஸ்மார்ட்போன்கள், டேப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு பெரிய அளவில் சலுகைகள் வில்லை. இந்த விற்பனை உதிரி பாகங்கள் (accessories) மற்றும் ஆடியோ பொருட்களில் கவனம் செலுத்துகிறது. ஆப்பிள் தயாரிப்பு பொருட்களை வாங்க நினைத்தால்,
குரோமா பிளாக் ஃப்ரைடே விற்பனை பயனுள்ளதாக இருக்கும்.

Hisense 43-இன்ச் 4K ஸ்மார்ட் டிவி

Hisense 43-inch 4K ஸ்மார்ட் டிவி 50 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. Black Friday விற்பனையில் ரூ. 20,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் டிவியானது Android TV OS இல் இயங்குகிறது. Dolby Vision மற்றும் Dolby Atmos போன்ற தொழில்நுட்பங்களை வழங்குகிறது.

JBL C100SI ஹெட்ஃபோன்

ஜே.பி.எல் சி100எஸ்.ஐ வயர்டு இன்-இயர் ஹெட்ஃபோன் பாதி விலையில் கிடைக்கிறது. ரூ. 1000க்கு மேல் விற்பனை செய்யப்படும் ஹெட்ஃபோன் Amazon India Black Friday விற்பனையில் ரூ.599-க்கு கிடைக்கும். நல்ல சவுண்ட் தரத்துடன் 3.5mm தரத்துடன் வரும் ஹெட்ஃபோன். டேப், லேப்டாப், போன், கணினியில் பயன்படுத்தலாம்.

boAt Stone 200 3W ப்ளூடூத் ஸ்பீக்கர்

அமேசான் இந்தியா விற்பனையில் இந்த ஸ்பீக்கரை குறைந்த விலையில் நல்ல தரத்துடன் வாங்கலாம். இது Black Friday விற்பனையில் ரூ.1,299க்கு கிடைக்கும். தண்ணீர் செல்லாமல் தடுக்கும் IPX8 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பீக்கர் AUX in port வசதி உள்ளது. மேலும் பயனர்கள் AUX கேபிள் மூலம் தங்கள் போன், லேப்டாப், கணினியை ஸ்பீக்கருடன் நேரடியாக இணைக்கலாம்.

Portronics Pure Sound Pro IV வயர்லெஸ் ப்ளூடூத் சவுண்ட் பார்

இந்தியாவில் Amazon Black Friday விற்பனையில் Portronics Pure Sound Pro IV 80% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த ப்ளூடூத் சவுண்ட் பார் ஸ்பீக்கரை ரூ.1,999 விலைக்கு வாங்கலாம். 16W ஆடியோ வசதி உள்ளது மற்றும் USB போர்ட் கொண்டு மற்ற சாதனங்களை கனெக்ட் செய்து பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Amazon india black friday sale 2022 top deals that you should not miss