பிரபல ஆன்லைன் வணிகதளமான அமேசான் அதன் இரண்டு புதிய ஃபர்னிச்சர்ஸ் பிராண்டுகளை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைனில் ஃபர்னிச்சர் பொருட்களை வணிகம் செய்வது என்பது கொஞ்சம் சவாலான விஷயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. காரணம் என்னவென்றால், அதில் இருக்கும் இடர்பாடுகள் தான். பெரும்பாலும் ஆன்லைனில் வாங்கும் பொருட்களின் தரம் குறித்த கேள்வி எழலாம், அதோடு உரிய தொகை, டெலிவரி செய்வதற்கான கால நேரம் ஆகியவவை குறிப்பிடத்தக்க விஷயங்களாகும்.
அமேசான் நிறுவனத்தின் பல்வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், Rivet, Stone & Beam, என அமேசான் நிறுவனம் புதிய ஃபர்னிச்சர் பிராண்டுகளை அறிமுகம் செய்து, ஃபர்னிச்சர்ஸ் விற்பனையையும் தொடங்கியுள்ளது. இதன் மூலமாக, ஷோபா, அலங்கார பொருட்கள், சேர்ஸ், சைடு டேபிள்ஸ், லேம்ம், வால்-ஆர்ட் உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் அமேசானில் விற்பனைக்கு உள்ளன.
அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச டெலிவரி வசதி உள்ளதாம். எனினும், வழக்கமான மற்ற பொருட்களை போன்று இரண்டு நாட்களில் டெலிவரி பெற முடியாது. சுமாராக 4-ல் இருந்து 5 வாரங்கள் டெலிவரிக்கு மற்ற ரீடெய்லர் எடுத்துக் கொண்டால், அமேசானில் ஒரு வார காலத்திற்குள் கிடைக்கும் என கூறப்படுகிறது.