Amazon Tamil News: அமேசான் நிறுவனம், தனது பிரைம் மெம்பர்களுக்காக, வருடாந்திர ஷாப்பிங் கார்னிவல் தேதியை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடத்தப்படும் இந்த ஷாப்பிங் திருவிழாவில், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கேமராக்கள், வீடியோ கேம் கன்சோல்கள், அக்சசரீஸ் உள்ளிட்டவைகளை அதிரடி தள்ளுபடியில் பெறலாம். ஐபோன் 11 மற்றும் சோனி பிளே ஸ்டேசன் 4க்காக எண்ணற்ற மக்கள் தீவிரமாக இந்த ஷாப்பிங் திருவிழாவை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Advertisment
அமேசான் பிரைம் டே என்றால் என்ன?
அமேசான் நிறுவனம், அதனுடைய பிரைம் மெம்பர்களுக்காக, ஆண்டுதோறும் நடத்தி வரும் ஷாப்பிங் திருவிழா ஆகும். 2015ம் ஆண்டில் அமேசான் நிறுவனம், 20வது ஆண்டை நிறைவு செய்ததையடுத்து, இந்த ஷாப்பிங் திருவிழாவை அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவில் பிளாக் பிரைடே நிகழ்ச்சியை போன்று மாபெரும் வெற்றி பெற்ற இந்த திருவிழாவால், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்டம் காண ஆரம்பித்தன. கடந்த 2-3 ஆண்டுகளாக ஒரு நாள் கால அளவிலேயே நடந்து வந்த இந்த ஷாப்பிங் திருவிழா, இந்தாண்டு 2 நாட்கள் திருவிழாவாக நடைபெற உள்ளது.
Amazon prime day 2020 sale: எப்போது நடைபெற உள்ளது?
2020ம் ஆண்டிற்கான அமேசான் பிரைம் டே நிகழ்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 6ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, 7ம் தேதி நள்ளிரவு 12 மணி என 48 மணிநேர திருவிழாவாக நடைபெற உள்ளது.
நான் பங்கேற்க முடியுமா?
அமேசான் பிரைம் டே ஷாப்பிங் திருவிழாவில், பிரைம் மெம்பர்களினால் மட்டுமே பங்கேற்க முடியும். பிரைம் மெம்பராக மாதத்திற்கு ரூ.129 அல்லது ஆண்டிற்கு ரூ.999 தனியாக கட்ட வேண்டும். http://www.amazon.in/prime. என்ற இணையதளத்திற்கு சென்று அவரவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல மாத அல்லது ஆண்டு சந்தா செலுத்தி பிரைம் மெம்பராக மாறியபிறகு இந்த திருவிழாவில் கலந்துகொள்ளலாம். இந்த மெம்பர்ஷிப் இல்லாமலும், 30 நாட்கள் டிரையலில் பங்கேற்று, பிரைம் டே திருவிழாவில் கலந்துகொள்ளலாம்.
என்ன ஆபர்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
என்னென்ன ஆபர்கள் வரும் என்று அமேசான் இதுவரை உறுதியாக எதையும் அறிவிக்கவில்லை. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களில் அதிகளவு சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் கிண்டில் இ புக், எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், அமேசான் பேசிக்ஸ் உள்ளிட்டவைகளில் நிச்சயம் குறிப்பிடத்தக்க வகையில் சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு அமேசான் இந்தியா இணையதள பக்கத்தை திறந்தால், அதில், கேமராக்கள் மற்றும் அக்சசரீஸ்கஸளுக்கு 70 சதவீதம், பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை, ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 60 சதவீதம் வரை மற்றும் ஸ்மார்ட் டிவிக்களுக்கு 60 சதவீதம் வரை சலுகைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் டே 2020 திருவிழாவில் எதிர்பார்க்கப்படும் சலுகைகள்
ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் 11 மற்றும் ஐபோன் எஸ்இ (2020)
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மற்றும் 5
ஆப்பிள் ஐபேட் 2019 ( 10.2 இஞ்ச்)
சாம்சங் கேலக்ஸி எஸ்10, நோட் 10 சீரிஸ்
சோனி பிளே ஸ்டேசன் 4 ஸ்லிம், பிளே ஸ்டேசன் 4 புரோ
மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன்எக்ஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன் ஆல் டிஜிட்டல் எடிசன்
முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள், Lightning Deals என்ற பெயரில் குறிப்பிடப்படும். இந்த பொருட்கள் சில நிமிடங்களிலேயே தீர்ந்துவிடும் என்பதால் இப்போதிலிருந்தே, இந்த திருவிழாவிற்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
என்ன பொருட்கள் தேவை, அதன் தற்போதைய விலை என்ன என்பதை தற்போதிலிருந்தே ஆராய்ந்து வைத்துக்கொண்டால், அந்த 48 மணிநேர திருவிழாவில் நொடிப்பொழுதை கூட வீணாக்காமல், நமக்கு தேவையான பொருட்களை மிகக்குறைந்த விலையில் வாங்கி மகிழலாம்.
முன்னணி நிறுவனங்களின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களை தொடர்ந்து கவனித்து வந்தாலே, அதன் பொருட்கள் எந்த அளவிற்கு சலுகை விலையில் அமேசான் பிரைம் டேயில் கிடைக்கும் என்ற தெளிவு கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil