அமேசான் பிரைம் வீடியோ பிரபலமான ஓ.டி.டி தளமாகும். பல்வேறு மொழி படங்கள், சீரிஸ் எனப் பல அதில் உள்ளன. பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாதம் அல்லது 1 ஆண்டுக்கு சப்ஸ்கிரைப் செய்து பிரைம் வீடியோக்களை பார்க்கலாம். ஏராளமானவர்கள் அமேசான் பிரைம் தளத்தை பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில், பிரத்யேகமாக மொபைல் வீடியோ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மொபைலில் மட்டும் அமேசான் வீடியோ பார்ப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. பிரைம் வீடியோ மொபைல் எடிசன் (Prime Video Mobile Edition) என அழைக்கப்படும் இந்ததிட்டத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்த முடியும். அக்கவுண்ட் சேர் செய்து பயன்படுத்த முடியாது. இந்ததிட்டம் 1 வருடத்திற்கு ரூ. 599 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமேசான் பிரைம் மற்றும் ஏர்டெல் இணைந்து மொபைல் எடிசனை அறிமுகப்படுத்தி, ஏர்டெல் தனது பயனர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக மொபைல் எடிசன் சேவையை வழங்கி வந்தது. தற்போது புதிய திட்டம் அனைத்து நெட்வொர்க் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் அமேசான் பிரைமின் அனைத்து வீடியோக்கள், அமேசான் ஓரிஜினல் (Amazon originals) வீடியோக்கள், கிரிக்கெட் நேரலை (live cricket matches) என அனைத்தையும் மொபைல் எடிசனில் SD (Standard Definition) தரத்தில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். High Definition தரத்தில் வீடியோக்களை பார்க்க standard version அப்கிரேடு செய்து மாதம் ரூ.179 அல்லது ஆண்டுக்கு ரூ.1499 செலுத்தி பார்க்கலாம்.
எப்படி பெறுவது?
இந்த திட்டத்தைப் பெற உங்கள் போனில் அமேசான் பிரைம் வீடியோ டவுன்லோடு செய்து, திட்டத்தை தேர்ந்தெடுத்து பெறலாம். அல்லது PrimeVideo.com என்ற இணையதளப் பக்கத்தில் திட்டத்தை தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil