ஆன்லைன் மோசடிகள் குறிப்பாக போன் மூலம் செய்யப்படும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. லோக்கல் சர்க்கிள் என்ற நிறுவனம் நடத்தி ஆய்வில் 66% பேர் தங்களுக்கு தினமும் குறைந்தது 3 ஸ்பேம் அழைப்புகள் (சந்தேகப்படும் படியான) வருவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், கூகுள் இந்த மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஜெமினி நானோ AI மூலம் ஸ்பேம் வகையான அழைப்புகளை ரியல்-டைமில் கண்டறிந்து அதை உடனடியாக எச்சரிக்கிறது. இந்த வசதி குறிப்பாக
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஜெமினி நானோ AI மூலம் ‘spam detection alerts’ என்ற பெயரில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இது எவ்வாறு வேலை செய்யும்?
நீங்கள் தொலைப் பேசியில் மற்றவரிடம் பேசும் போது கூகுள் உங்கள் உரையாடலை கவனித்து கீவேர்ட்டுகளாக சேகரிக்கும். சந்தேகப்படும் படியான வார்த்தைகள் இருந்தால் கூகுள் அது தொடர்பாக அலர்ட் அனுப்பும். (எ.கா) வங்கி பிரதிநிதி (bank representative) என்ற பெயரில் யாராவது உங்களை தொடர்பு கொண்டு பேசினால், அவர்கள் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அதாவது கார்டு எண், பாஸ்வேர்ட் போன்றவைகள் உபயோகப்படுத்தி பேசினால் கூகுள் தானகவே பயனருக்கு எச்சரிக்கையை அனுப்பும். இது ஸ்பேம் அழைப்பாக இருக்கலாம் என்று மெசேஜ் அனுப்பி விடும்.
எனினும் இது உங்கள் ப்ரைவசியை பாதிக்கும் என்று கவலைப் பட வேண்டாம். இந்த நடைமுறை முழுக்க உங்கள் device வழியாக மட்டுமே செயல்படும். கூகுள் எந்த தரவுகளையும் சேகரித்து வைக்காது. அதோடு இந்த opt-in feature-ஐ ஒருவர் manual ஆகத் தான் எனெபிள் செய்ய முடியும்.
தற்போது இந்த வசதி குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 8 ப்ரோ மற்றும் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. எனினும் வரும் நாட்களில் இந்த வசதி பலருக்கும்அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“