scorecardresearch

Vijay Sales Apple Day: அதிரடி ஆஃபர்.. குறைந்த விலையில் ஐ போன், ஐ பேட்.. எப்படி வாங்குவது?

Apple Days at Vijay Sales விற்பனையில் ஐபோன் உள்பட ஆப்பிள் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Vijay Sales Apple Day: அதிரடி ஆஃபர்.. குறைந்த விலையில் ஐ போன், ஐ பேட்.. எப்படி வாங்குவது?

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ், ஐ பேட், MacBook மற்றும் பல ஆப்பிள் ஆக்சஸரீஸ்கள், ஆப்பிள் தயாரிப்பு பொருட்கள் விஜய் சேல்ஸ் ஆண்டு இறுதி விற்பனையில் குறைந்த மற்றும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் 23 முதல் விற்பனை தொடங்கியுள்ளது. ஐபோன் முதல் ஆப்பிள் பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கி மகிழுங்கள். எந்தெந்த பொருட்களுக்கு தள்ளுபடி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபோன் 14 சீரிஸ்

iPhone 14 ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டு தற்போது ரூ.74,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் Vijay Sales விற்பனையில் ஐபோன் 14 சீரிஸ் போன்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. HDFC வங்கி கார்டுகள் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.5,000 தள்ளுபடி விலையில் ரூ.69,900க்கு போன் வாங்கலாம்.

ஐபோன் 14 பிளஸ் ரூ.78,699 முதல், ஐபோன் 14 ப்ரோ ரூ.1,26,100 முதல், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ரூ.1,35,800 முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 ஆகியவை முறையே ரூ.52,900 மற்றும் ரூ.62,900 தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

HDFC வங்கியின் ரூ.5000 கேஸ்பேக் ஆஃபர் iPhone 14, iPhone 14 Plus போன்களுக்கு மட்டும் பொருந்தும். அதேசமயம்
ரூ. 3000 தள்ளுபடி iPhone 12 மற்றும் iPhone 13 போன்களுக்கு மட்டும் பொருந்தும். Pro மாடல்களுக்கு HDFC ஆஃபர் இல்லை.

iPads மற்றும் MacBooks

விஜய் சேல்ஸ் விற்பனையில் iPad Gen 9 ரூ. 25,700க்கும், iPad Gen 10 ரூ. 39,490க்கும் விற்பனை செய்யப்படுகிறது. iPad Air Gen 5 ரூ. 51,700க்கு தொடங்குகிறது. iPad Pro ரூ.73,000இல் இருந்து விற்பனையாகிறது.

The MacBook Air M1 ரூ.77,900 ற்றும் மேக்புக் ஏர் எம்2 ரூ.95,500 முதல் விற்பனை தொடங்குகிறது. மேக்புக் ப்ரோ எம்2 ரூ.1,04,300இல் விற்பனையாகிறது. இந்த பொருட்கள் தற்போது விற்பனை விலையில் இருந்து ரூ. 10,000 HDFC தள்ளுபடி விற்பனை வழங்கப்படுகிறது.

பிற தயாரிப்புகள்

Apple Watch Series 8 ரூ.39,900 முதல் விற்பனை செய்யப்படுகிறது. Apple Watch SE ரூ.26,000 க்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ரூ.82,300க்கும், ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ ரூ.23,400க்கும் கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Apple iphone 14 at rs 69900 and more check all vijay sales apple day deals here