/tamil-ie/media/media_files/uploads/2017/09/appleevent_big_1.jpg)
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்ட 10-வது ஆண்டு நிறைவையொட்டி, ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த படைப்புகளை இன்று அறிமுகம் செய்கிறது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ் ஆனது ஐபோன் 7 சீரியஸின் அப்கிரேடாக இருக்கும் என கருதப்படும் நிலையில், இந்நிகழ்ச்சியில் ஐபோன் எக்ஸ் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை எவ்வாறு நேரலையில் பார்க்க முடியும் என்று தெரிந்து கொள்ளலாம வாருங்கள்.
இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்நிகழ்ச்சி தொடங்குகிறது. கலிபோர்னியாவில் புதிதாக கட்டப்பட்ட ஆப்பிள் பார்க் கேம்பஸில் உள்ள ஸ்டீவ் ஜாப் தியேட்டரில் வைத்து தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல பில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்ட அந்த ஆப்பிள் பார்க்கில் முதன்முதலாக தற்போது தான் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று இந்த நிகழ்ச்சியை நேரலையாக காண முடியும். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சில ஹார்ட்டுவேர்கள் முக்கியமானது. எனவே,இணைய தளவசதி இருந்தால் மட்டும் இதனை காண முடியாது என்பது கவனிக்கத்தக்கது.
ஆப்பிள் பயனர்கள் ஐஓஎஸ் அல்லது மேக்ஓஸ் சாதனம் மூலமாக நேரலையில் பார்க்கமுடியும். இதற்கு, ஐஓஎஸ் 9.0 அல்லது அதற்து பின்னர் வந்த அப்டேட்ஸ் அவசியம். ஆப்பிள் ஐபோன், ஐபேடு, ஐபாடு டச், ஆகியவற்றில் சபாரி ப்ரவுசரில் இதனை காணலாம். மேக்ஓஎஸ் பயனர்கள் v10.11 அல்லது அதற்கு பின்னர் வந்த அப்டேட்ஸ் இருந்தால் இந்நிகழ்ச்சியை நேரலையில் காண முடியும்.
ஆப்பிள் டிவி பயனர்கள் 2-வது அல்லது 3-வது தலைமுறை சாதனத்திலும் அல்லது அதற்கு பின்னனர் வந்த 4-வது தலைமுறை சாதனத்திலும் நிகழ்ச்சியை பார்க்கலாம். ஒருவேளை விண்டோவ்ஸ் 10 பயனர்களாக இருந்தால், மைக்ரோசாப்ட் எட்ஜ் ப்ரவுசர் அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us