/tamil-ie/media/media_files/uploads/2017/07/appleiphone_ap_1.jpg)
iOS 11 Adoption Rate
ஆப்பிள் ஐபோன் 8-ல் ஃபின்கர் ஸ்கேனர் இருக்காது என்று ஆய்வாளர்கள் கணித்திருப்பதாக சமூக வலை தளங்களில் செய்தி பரவிக் கிடக்கிறது.
ஆப்பிள் ஐ போன் 8 சிறப்பம்சங்கள் குறித்து இணையதளத்தில் பேல்வேறு வதந்திகள் பரவி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், ஆப்பிள் குறித்த பிரபல ஆய்வாளர் மிங் சிங் கியோ, ஐபோன் 8 குறித்து கணித்துள்ளார். அவரது அந்த கணிப்பிப்பின்படி, ஆப்பிள் ஐபோன் 8-ல், டிஸ்பிளேவிற்கு கீழே, பிஃன்கர்பிரிண்ட் ஸ்கேனர் இருக்காதாம்.
இது போன்ற டெக்னாலஜியை பயன்படுத்தும் போது இன்னமும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சிக்கலான பேனல் மற்றும் பிக்சல் டிசைன் ஆகியவை தான் அவற்றிற்கான காரணம் என்கிறார் மிங் சிங் கியோ.
ஆனாலும், இந்த பிரச்சனைக்கு ஆப்பிள் நிறுவனம் தீர்வு கண்டுவிட்டது என தகவல் தெரிவிக்கின்றன. எனவே, மிங் சிங் கியோ-வின் இந்த கணிப்பு சரியாக இருக்குமா என்பது சந்தேகமே. மேலும், ஐ போன் டிசைன் மூன்று வடிவில் வருகிறதாம். அதன்படி, ஓஎல்இடி பயன்படுத்தப்படும்போது, 5.2 இன்ச் அல்லது 5.5 இன்ச் டிஸ்பிளே இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் வெர்ஷனில் எல்சிடி டிஸ்ப்ளே இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்.
மேலும், ஓஎல்இடி ஐபோன் வரும்பட்சத்தில், உலகிலேயே ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தில் கச்சிதமான ஸ்மார்ட்போனாக இருக்கும் என கணித்திருக்கிறார். அதோடுமட்டுமல்லாமல், ஹோம் பட்டன் என்ற ஒன்று இனி இருக்காதாம். இது முன்னதாகவே கூறப்பட்டு வரும் விஷயம் என்பதால், தற்போது ஆப்பிள் நிறுவனம், ஐபோனில் எவ்வாறு ஹோம் பட்டனை அமைக்கப்போகிறது என்பது தான்.
மேலும், ஆப்பிள் ஐபோன் 8 -ல் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் 3டி சென்சார் இருக்கக் கூடும். அதோடு, முன்னதாக வெளியான ஐபோன் செல்ஃபி கேமராவை விட இனி வரும் ஐபோனில் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆப்பிள் நிறுவனமானது 32 ஜிபி மாடலை இனி தயாரிக்க வாய்ப்பில்லை என்றும், அதனால் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி திறன் கொண்டவாறு ஐபோனை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் கணித்துள்ளார்.
வரும் செம்டெம்பர் மாதம் ஐபோனின் அடுத்த வெர்ஷன் வெளியாக வாய்ப்பிருக்கிறது. அதன்படி ஓ.எல்.இ.டி வெர்ஷனுக்கு அதிக வரவேற்பு இருக்குப்பதோடு, டிமான்டும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று மிங் சிங் கியோ யூகித்திருக்கிறார்.
மிங் சிங் கியோ கணிப்பின்படி பார்த்தோம் என்றால், ஓஎல்இடி டிஸ்பிளே வருகை ஐபோனில் ஒரு புதிய புரட்சியாக இருக்கும் போல. இது கூட அடுத்த ஐபோன் வருவதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
முன்னதாக பாக்ஸ்கோன் இன்சைடர்ஸ் கணிப்பின்படி, 2107-ம் ஆண்டு ஆப்பிள் வெளியிடும் ஐபோனில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் 3டி சென்சாருடன், வயர்லஸ் சார்ஜிங் வசதியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆப்பிள் நிறுவனம், ஐபோனில் டிஸ்பிளேவிற்கு கீழே ஃபின்கர்ப்ரிண்ட் ஸ்கேனர் பொருத்தி சோதனை செய்து கொண்டிருக்கிறது என்றும், ஆனாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டது. எனவே, அவற்றில் சில மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக பாக்ஸ்கோன் இன்சைடர்ஸ் தெரிவித்திருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.