ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் , வாட்ச் உள்ளிட்ட தயாரிப்புகள் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்ட 10 ஆண்டு நிறைவையொட்டி இந்த புதிய தயாரிப்புகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றபோதிலும், பல்வேறு தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆப்பிள் இணையதளத்தில் வாங்கினால், 5 சதவீத தள்ளுபடியில் வாங்க முடியுமாம். ஐபோன் 8, ஐபோன்8+, ஐபோன் எக்ஸ் எடிசன், ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 3, ஆப்பிள் டிவி(2017) மற்றும் ஐபாட் டச்(7-வது தலைமுறை) ஆகியவற்றை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபாட் நானோ, ஐபாட் ஷஃபில் போன்றவற்றை தயாரிப்பதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திவிட்டது. மேலும், ஐபாட் சீரியஸின் அடுத்த அப்டேட்ஸ்களை வெளியிடாமல் வந்தது. இந்த நிலையில், தற்போது ஐபாட் சீரிஸில் அப்கிரேடு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நேரப்படி இரவு 10.30 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்கிறது. முன்னதாக வெளியான ஐபோன் 7 சீரியஸை விட இந்த ஐபோன் எக்ஸ் எடிசனில் ஹோம் பட்டன் ஏதும் இல்லாத நிலையில் அதிக அப்கிரேடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.