வீடியோ: ஐஃபோன் எக்ஸ் அறிமுக நிகழ்ச்சியின் முக்கிய தருணங்கள் மற்றும் ஐஃபோன் எக்ஸ்-ன் சிறப்பம்சங்கள்

ஐஃபோன் 8, ஐஃபோன் 8 ப்ளஸ், ஐஃபோன் எக்ஸ் ஆகிய மூன்று ஐஃபோன்களையும், கலிஃபோர்னியாவில் புதிதாக கட்டப்பட்ட ’ஸ்டீவ் ஜாப்ஸ்’ அரங்கத்தில் அறிமுகப்படுத்தியது.

நந்தகோபால் ராஜன், இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஆப்பிள் நிறுவனம், ஐஃபோன் செல்பேசிகளை அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகளை நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், ஐஃபோன் 8, ஐஃபோன் 8 ப்ளஸ், ஐஃபோன் எக்ஸ் ஆகிய மூன்று ஐஃபோன்களையும், கலிஃபோர்னியாவில் புதிதாக கட்டப்பட்ட ’ஸ்டீவ் ஜாப்ஸ்’ அரங்கத்தில் செவ்வாய் கிழமை அறிமுகப்படுத்தியது. இது ஐசோன் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியிலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சி உணர்ச்சிகரமான ஒன்றாக அமைந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த முதன்மை செயலர் மற்றும் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் பெயரில் அமைக்கப்பட்ட அரங்கத்தில் இந்த மூன்று புதிய இஃபோன்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐஃபோன் செல்பேசி அறிமுகப்படுத்திய 10 ஆண்டுகளிலேயே, அது ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகத்தையே மாற்றியுள்ளது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

இந்த 10 ஆண்டுகால நிறைவை ஆப்பிள் ஐஃபோன் சரியான வகையில் கொண்டாடியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஐஃபோன் காதலர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஐஃபோன் எக்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் இப்போதைய தலைமை செயல் அலுவலர் டிம் குக், ஐஃபோன் எக்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியபோது, ”ஒன் மோர் திங்” என சர்வ சாதாரணமாக கூறி அதனை அறிமுகப்படுத்தினார். ஆனால், ஒட்டுமொத்த உலகமும் ஐஃபோன் எக்ஸ்-க்காகத்தான் காத்துக்கொண்டிருந்தது. 2 மணிநேரம் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் ஐஃபோன் எக்ஸ் என்ற வார்த்தைகாக தான் அவ்வளவு பேரும் காத்துக்கொண்டிருந்தனர். ஆப்பிள் நிறுவனத்தின் விலையுயர்ந்த ஐஃபோன் செல்பேசியாக இப்போது ஐஃபோன் எக்ஸ்-தான் உள்ளது. அதன் விலை 999 டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பின் படி, ரூ.1,02,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

bezel-less டிசைன் எனப்படு, செல்பேசியின் திரையை தாங்கக்கூடிய bezel இல்லாத வகையில் இந்த ஐஃபோன் எக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. வயர்லஸ் சார்ஜிங், ஹோம் ஸ்கிரீனில் பட்டன் இல்லாமல் முகத்தை ஸ்கேன் செய்து செல்பேசியை அன்-லாக் செய்யும் வசதி ஆகியவை ஐஃபோன். எக்ஸ்-ன் சில சிறப்பம்சங்கள்.

உலகிலேயே பிரலபமான செல்ஃபோன்களில் உள்ள 10 தனித்தனி சிறப்பம்சங்கள் இந்த ஒரே செல்பேசியில் உள்ளன. உண்மையான காட்சிகளில் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட விஷயங்களையும் கலந்து தரும் ‘ஆக்மெண்டட் ரியாலிட்டி’ வசதியுடன் வீடியோவை இந்த ஐஃபோன் எக்ஸ்-ல் காணமுடியும்.

இந்த ஐஃபோன் எக்ஸ்-க்கு உருவாகியிருக்கிற எதிர்பார்ப்புகள் மூலம் அதே சமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் 8 ப்ளஸ் ஆகிய ஐஃபோன்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் இமேஜ் உருவாகும்.

, iphone x, apple company, iphone company,

ஐஃபோன் 8, ஐஃபோன் 8 ப்ளஸ், ஐஃபோன் எக்ஸ் அறிமுக நிஅக்ழ்ச்சியின்போது, பலரும் அந்த ஐஃபோன்களை தொட்டுப்பார்க்க ஆசை கொண்டனர். மேலும், ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் 8 ப்ளஸ் செல்பேசிகளுக்கு இடையேயான வித்தியாசங்களையும் அவர்கள் தெரிந்துகொள்ள முற்பட்டனர்.

இதையும் படியுங்கள்: ஐஃபோன் எக்ஸ்: முழு காட்சித்திரை, ஃபேஸ் ஸ்கேன் இன்னும் பல: இந்தியாவில் விலை என்ன? ப்ரீ புக்கிங் எப்போது?

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Apple iphone x is the new gold standard for smartphone industry ev

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com