ஐஃபோன் எக்ஸ் ப்ரீ ஆர்டர்: ஃபிளிப்கார்டில் அரை மணிநேரத்தில் விற்றுத்தீர்ந்தது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் எக்ஸ் செல்ஃபோன், இந்தியாவில் ஃபிளிப்கார்ட் வணிக இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய ஆரம்பித்த அரை மணிநேரத்திலேயே விற்றுத்தீர்ந்தது.

By: October 27, 2017, 5:11:09 PM

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் எக்ஸ் செல்ஃபோன், இந்தியாவில் ஃபிளிப்கார்ட் வணிக இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய ஆரம்பித்த அரை மணிநேரத்திலேயே விற்றுத்தீர்ந்தது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் எக்ஸ், வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஃபிளிப்கார்டு வணிக இணையத்தளத்தின் மூலம் இந்தியாவில் முன்பதிவு ஆரம்பமாகியது. ஆனால், அரை மணிநேரத்தில், அதாவது ஒரு மணிக்கெல்லாம் ஐஃபோன் எக்ஸ் விற்றுத்தீர்ந்தது.

அதனால், இதன்பின், ஐஃபோன் எக்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரும்போது தெரிந்துகொள்ள விரும்பும் பயனாளர்கள், ஃபிளிப்கார்ட் இணையத்தளத்தில் ’notify me’ என்ற ஐகானில் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துகொள்ளலாம்.

சிட்டி க்ரெடிட் கார்டு மற்றும் சிட்டி வார்ல்டு கிரெடிட் கார்டுகள் மூலம், ஐஃபோன் எக்ஸ்-ஐ ஆர்டர் செய்தவர்களுக்கு ரூ.22,000 கேஷ் பேக் சலுகையை வழங்கியுள்ளது ஃபிளிப்கார்டு. மேலும், ஐஃபோன் எக்ஸ்-ஐ ப்ரீ ஆர்டர் செய்பவர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகளையும் ஃபிளிப்கார்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

மீண்டும் ஐஃபோன் எக்ஸ் ப்ரீ ஆர்டர் எப்போது என்பது அறிவிக்கப்படவில்லை. சில்வர் மற்றும் சில்வர் க்ரே நிறங்களில் ஐஃபோன் எக்ஸ் கிடைக்கிறது. 64 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் திறன்களில் இரு வகைகளைக்கொண்ட ஐஃபோன் எக்ஸ், முறையே ரூ.89,000 மற்றும் ரூ.1,02,000 விலையுடையது.

இதையும் படியுங்கள்: ஐஃபோன் எக்ஸ் குறித்த சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Apple iphone x out of stock within half an hour into pre sale booking

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X