Advertisment

வீடியோ: ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்: டிஸ்பிளே, டிசைன் இன்னும் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து தெரிஞ்சுக்கோங்க

வால்யூம் பட்டன்கள் எங்கு இருக்குமோ, அதே இடத்தில்தான் ஐஃபோன் எக்ஸிலும் அவை அமைந்திருக்கும். ஃபோனின் அடியில் ஸ்பீக்கர் க்ரில் அமைந்திருக்கும்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
apple iphone x, iphone 8 , iphone 8 plus

கடந்த வாரம் ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்-ன் ப்ரீ ஆர்டரின்போது, ஃபிளிப்கார்ட் இணையத்தளத்தில் அரை மணிநேரத்திலேயே எல்லாமும் விற்று தீர்ந்தன. ஐஃபோன் எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டபோதே, அதில் அப்படி என்னத்தான் இருக்கிறது என்று ஆர்வத்தை தூண்டியது. இப்போது, ஐஃபோன் எக்ஸின் சில சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ் டிசைன்:

ஐஃபோன் எக்ஸ்-ஐ பார்த்ததும் உங்களுக்கு தோன்றுவது, அதன் சிறிய வடிவம் தான். ஐஃபோன் 8-ஐ விட இது பெரியது அல்ல. 5.8 இன்ச் ஸ்கிரீன் அளவை கொண்டது. ஆனால், ஐஃபோன் 8 ப்ளஸ்-ஐ விட, பெரிய ஸ்கிரீனை கொண்டுள்ளது.

publive-image

வித்தியாசமான ஸ்டீல் ஃபிரேமைக் கொண்டது இந்த ஐஃபோன் எக்ஸ். இந்த ஐஃபோனில் எவ்வித முனைகளும் இல்லை. முழு ஸ்க்ரீனை உடையது.

ஐஃபோன் எக்ஸ்-ல் ஹோம் பட்டனும் இல்லை. சமீபத்தில் வந்த ஐஃபோன்களில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் எங்கு இருக்குமோ, அதே இடத்தில்தான் ஐஃபோன் எக்ஸிலும் அவை அமைந்திருக்கும். ஃபோனின் அடியில் ஸ்பீக்கர் க்ரில் அமைந்திருக்கும்.

ஐஃபோன் 7 ப்ளஸ் மற்றும் ஐஃபோன் 8 ப்ளஸ் ஆகியவற்றில் டூவல் கேமரா பம்ப் கிடைமட்டமாக அமைந்திருப்பதுபோல் அல்லாமல், அவை ஐஃபோன் எக்ஸ்-ல் செங்குத்தாக அமைந்திருக்கும். இந்த கேமரா பம்ப், ஐஃபோன் 8 ப்ளஸ்-ல் எவ்வளவு உயரம் கொண்டிருக்கிறதோ, அதே அளவு உயரம்தான் ஐஃபோன் எக்ஸிலும் அமைந்திருக்கும்.

இந்த ஃபோனின் பின்புறம் கண்ணாடியால் ஆனதாகும். அதனால், இதனை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ் டிஸ்பிளே:

சூப்பர் AMOLED தொழில்நுட்பத்தைக்கொண்ட தொடு திரையைக்கொண்ட முதல் ஐஃபோன் இதுதான். 5.8 டிஸ்பிளேம் அதிக பிரகாசிக்கும் திறனை கொண்டிருக்கும். 458 பிபிஐ அடர்த்தியைக் கொண்டிருக்கும்.

publive-image

Iphone 8 Iphone 8 Plus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment