கடந்த வாரம் ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்-ன் ப்ரீ ஆர்டரின்போது, ஃபிளிப்கார்ட் இணையத்தளத்தில் அரை மணிநேரத்திலேயே எல்லாமும் விற்று தீர்ந்தன. ஐஃபோன் எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டபோதே, அதில் அப்படி என்னத்தான் இருக்கிறது என்று ஆர்வத்தை தூண்டியது. இப்போது, ஐஃபோன் எக்ஸின் சில சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ளலாம்.
ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ் டிசைன்:
ஐஃபோன் எக்ஸ்-ஐ பார்த்ததும் உங்களுக்கு தோன்றுவது, அதன் சிறிய வடிவம் தான். ஐஃபோன் 8-ஐ விட இது பெரியது அல்ல. 5.8 இன்ச் ஸ்கிரீன் அளவை கொண்டது. ஆனால், ஐஃபோன் 8 ப்ளஸ்-ஐ விட, பெரிய ஸ்கிரீனை கொண்டுள்ளது.
வித்தியாசமான ஸ்டீல் ஃபிரேமைக் கொண்டது இந்த ஐஃபோன் எக்ஸ். இந்த ஐஃபோனில் எவ்வித முனைகளும் இல்லை. முழு ஸ்க்ரீனை உடையது.
ஐஃபோன் எக்ஸ்-ல் ஹோம் பட்டனும் இல்லை. சமீபத்தில் வந்த ஐஃபோன்களில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் எங்கு இருக்குமோ, அதே இடத்தில்தான் ஐஃபோன் எக்ஸிலும் அவை அமைந்திருக்கும். ஃபோனின் அடியில் ஸ்பீக்கர் க்ரில் அமைந்திருக்கும்.
ஐஃபோன் 7 ப்ளஸ் மற்றும் ஐஃபோன் 8 ப்ளஸ் ஆகியவற்றில் டூவல் கேமரா பம்ப் கிடைமட்டமாக அமைந்திருப்பதுபோல் அல்லாமல், அவை ஐஃபோன் எக்ஸ்-ல் செங்குத்தாக அமைந்திருக்கும். இந்த கேமரா பம்ப், ஐஃபோன் 8 ப்ளஸ்-ல் எவ்வளவு உயரம் கொண்டிருக்கிறதோ, அதே அளவு உயரம்தான் ஐஃபோன் எக்ஸிலும் அமைந்திருக்கும்.
இந்த ஃபோனின் பின்புறம் கண்ணாடியால் ஆனதாகும். அதனால், இதனை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ் டிஸ்பிளே:
சூப்பர் AMOLED தொழில்நுட்பத்தைக்கொண்ட தொடு திரையைக்கொண்ட முதல் ஐஃபோன் இதுதான். 5.8 டிஸ்பிளேம் அதிக பிரகாசிக்கும் திறனை கொண்டிருக்கும். 458 பிபிஐ அடர்த்தியைக் கொண்டிருக்கும்.