ஐபோன் XS மேக்ஸ் ரிவ்யூ : கேமரா மற்றும் திரைப்பற்றி ஒரு பார்வை

2688 x 1242 ரெசலியூசனுடன் வரும் இந்த போன் 458 PPIஐக் கொண்டிருக்கிறது...

நந்தகோபால் ராஜன்

ஐபோன் XS மேக்ஸ் ரிவ்யூ : ஆப்பிள் நிறுவனம் கடந்த 12ம் தேதி மூன்று போன்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஐபோன் XS மேக்ஸ் ஐபோன்களில் மிகப்பெரிய ஐபோன் என்று அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். ஆனால் ஆப்பிள் ஐபோன் 8 எந்த அளவிற்கு இருந்ததோ அதே அளவில் தான் இருக்கிறது. ஆனால் ஐபோன் XS மேக்ஸ் மிகப்பெரிய திரையினை உடைய ஐபோன் இதுவாகும்.

ஐபோன் XS மேக்ஸ் ரிவ்யூ – இந்தியாவில் விலை என்ன?

செப்டம்பர் 28ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த போன்கள் கோல்ட், சில்வர் மற்றும் கிரே நிறங்களில் வெளியாகிறது. 64ஜிபி ஐபோன் XS மேக்ஸின் விலை 1,09,900 ரூபாய் ஆகும். அதற்கடுத்த வெர்ஷனான 256ஜிபி ஐபோனின் விலை விலை ரூபாய் 1,24,900 ஆகும் மற்றும் 512ஜிபி போனின் விலை Rs 1,44,900 ஆகும்.

ஐபோன் மேக்ஸ் XS திரை

சூப்பர் ரெட்டினா திரையுடன் வெளிவருகிறது இந்த போன். 2688 x 1242 ரெசலியூசனுடன் வரும் இந்த போன் 458 PPIஐக் கொண்டிருக்கிறது. வீடியோக்கள் பார்ப்பதற்கும் தரமான ஆடியோக்களை பெறுவதற்கும் இந்த போன் மிகவும் சரியான தேர்வாக இருக்கும்.

ட்ரூ டோன் (True Tone) என்ற சிறப்பம்சத்துடன் வெளிவரும் இந்த போனில் நிறங்கள் எல்லாம் மிகவும் இயல்பாக தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் நீல நிறத்தின் டிஜிட்டல் லுக் இல்லாமல் காணப்படும். ஹெச்.டி.ஆர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் வகையில் இதன் திரை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XS மேக்ஸ் ரிவ்யூ

ஐபோன் XS மேக்ஸ்ஸில் எடுக்கப்பட்ட புகைப்படம்

கேமரா

இரட்டை பின்பக்க கேமராக்களைக் கொண்டிருக்கிறது. அதன் திறன் 12MP (f/1.8) + 12MP (f/2.4) ஆகும். அதே போல் செல்பி கேமராவும் 7MPயுடன் கூடிய f/2.2 திறனைப் பெற்றிருக்கிறது.  இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் துல்லியமாகவும் அழகாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close