ஆப்பிள் நிறுவனம் ஏர்போட்ஸ் லைட் (AirPods Lite) என்று கூறப்படும் குறைந்த விலை இயர்பட்களை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் ஏர்போட்ஸ் தேவை இந்த ஆண்டு குறையலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக 2022 இல் 73 மில்லியன் யூனிட்களில் இருந்து 2023 இல் 63 மில்லியன் யூனிட்களாக குறையும் எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க குறைந்த விலையில் இயர்பட்களை தயாரிக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக டெக் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆப்பிள் தற்போது இந்தியா உள்பட பிற நாடுகளில் 4 வகை ஏர்போட் வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது. AirPods 2nd-Gen ஏர்போட் தான் தற்போது உள்ள ஏர்போட்களில் குறைந்த விலையில் வருகிறது. AirPods 2nd-Gen ரூ.14,900 ஆகும். AirPods 3rd-Gen ரூ.19,900, AirPods Pro 2nd-Gen ரூ.26,900 ஆகும். ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஓவர்-இயர் ஹெட்ஃபோன்கள் அதன் போர்ட்ஃபோலியோவில் மிகவும் விலையுயர்ந்த ஆடியோ தயாரிப்பு ஆகும். இதன் விலை ரூ.59,900 ஆகும். ஆப்பிளின் புதிய TWS இயர்பட் (AirPods Lite) ரூ. 10,000 விலைக்கு அறிமுகப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி அறிமுகப்படுத்தினால், இது பல ஐபோன் பயனர்களை ஈர்க்கும். இது நிச்சயம் பட்ஜெட் விலை இயர்பாடாகவும், ஐபோன் பயனர்களிடையே வரவேற்பை பெறுபவையாகவும் இருக்கும்.
ஆப்பிள் ஏர்போட்ஸ் லைட் தயாரிக்கப்பட்டால் அது AirPods 2nd-Gen ஏர்போட்டுடன் ஒத்திருக்கும். சார்ஜிங் ஸ்லாட் மாற்றப்படலாம். அது யுனிவர்சல் டைப்-சி போர்ட்டாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆப்பிள் நிறுவனம் ஏர்போட்ஸ் லைட் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/