சமீப நாட்களில் ஏ.ஐ என்ற வார்த்தையை அதிக அளவில் கேட்டிருப்போம். செய்திகளிலும், நிபுணர்களும் கருத்துகள் கூறிவருவதை பார்த்திருப்போம். குறிப்பாக சாட்GPT(ChatGPT) பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ChatGPT Artificial Intelligence (AI) என்று சொல்லக் கூடிய செயற்கை நுண்ணறிவு தளமாகும். நமக்கு தேவைப்படுகிற தகவல் முதல் நாம் செய்யக் கூடிய வேலைகள் வரை அனைத்தும் இது செய்யும். பள்ளி, கல்லூரி கட்டுரைகள், பாடங்கள், ஐடி ஊழியர்களுக்கு தேவைப்படுகிற கோட்டிங், கன்டெண்ட் என அனைத்து தகவல்களையும் இது வழங்குகிறது.
இதனால் பல துறை வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலையும் உள்ளது. ஏன் ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள் கூட உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அச்சு அசல் மனிதர்கள் போன்ற தோற்றமும், மொழி உச்சரிப்பும் கொண்டுள்ளபடி ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். மனிதர்களுக்கும், ஏ.ஐ மாடல்களுக்கும் தோற்றத்தில் வித்தியாசம் கண்டு கொள்ள முடியாதபடி உருவாக்கப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து. இந்தியா உள்பட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் ChatGPT ஏ.ஐ தளத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சீனப் பள்ளியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இளம் தலைமுறையினரை பார்க்க பாவமாக இருக்கிறது. அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களா? அல்லது சபிக்கப்பட்டவர்களா? காலம் மட்டுமே பதில் சொல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பள்ளி ஒன்றில், மாணவர்கள் வருகை, பாடம் கவனிப்பது முதல் அவர்கள் உணவு சாப்பிடுவது வரை அனைத்தும் ஏ,ஐ தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ரஹ்மான் பதிவை மேற்கோள் காட்டி ஏ,ஐ-யின் சாதக பாதகங்கள் குறித்து நெட்டிசன்கள் பலரும் விவாதம் நடத்தி வருகின்றனர். தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் தான் என்று பலரும் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“