நாசாவின் லூசி விண்கலம் வியாழன் ட்ரோஜன் சிறுகோள்களை ஆய்வு செய்வதற்காக 6 பில்லியன் கிலோமீட்டர் பயணத்தில் உள்ளது. இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) லூசி முதல்முறையாக ஒரு சிறுகோளை நெருங்கிச் செல்ல உள்ளதாக விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது. இது வரை, அந்த சிறுகோள் சிறந்த தொலைநோக்கிகளில் கூட ஆய்வு செய்ய முடியவில்லை. மர்மமாகவே உள்ளது.
அந்த சிறுகோள் "டிங்கினேஷ்" சிறுகோளாகும். இது 1 கிலோமீட்டர் அகலம் கொண்டது மற்றும் செவ்வாய் மற்றும் வியாழன் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் உள்ள சிறுகோள்களின் முக்கிய பெல்ட்டில் சூரியனைச் சுற்றி வருகிறது. லூசி செப்டம்பர் 3 முதல் டிங்கினேஷைக் கண்காணித்து வருகிறது, மேலும் 12 வருட பயணத்தில் லூசி பார்வையிடும் முதல் சிறுகோள் இதுவாகும்.
லூசியால் பலவற்றை அவதானிப்பது சாத்தியம், ஏனெனில் அது சிறுகோள்களை நிறுத்தாது அல்லது சுற்றிவராது. பதிலாக அது "ஃப்ளைபை" செய்யும் வேகத்தில் முடிந்தளவு தரவுகளைச் சேகரிக்கும்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/asteroid-dinkinesh-nasa-lucy-mission-9008806/
நாசா அக்டோபர் 16, 2021 அன்று லூசி விண்கலத்தை ஏவியது. இதன் முக்கிய நோக்கம் வியாழன் ட்ரோஜன் சிறுகோள்களை ( Jupiter Trojan asteroids) ஆய்வு செய்வதாகும். இது இரண்டு "திரள்களில்" சூரியனைச் சுற்றிவரும் சிறிய உடல்களின் ஒரு பெரிய குழுவைக் குறிக்கிறது. திரள்களில் ஒன்று வியாழனை அதன் சுற்றுப்பாதையில் வழிநடத்துகிறது.
வாயு ராட்சதத்திற்கு பின்னால் செல்கிறது. ஆனால் அதற்கெல்லாம் முன், லூசி முதலில் டிங்கினேஷை ஆய்வு செய்யும். மற்றொன்று டொனால்ட்ஜான்சன் என்ற முக்கிய பெல்ட்டில் உள்ள சிறுகோளையும் ஆய்வு செய்யும் என்று நாசா கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“