ஜியோபோன் குறித்து முகேஷ் அம்பானி அறிவித்தபோது, பொதுமக்களின் மத்தியில் ஜியோபோன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. காரணம் விலையில்லை என்றும், 4ஜி வோல்இ வசதியும் கொண்டது தான். ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய ஜியோபோன் முன்பதிவு ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, சுமார் 10-லட்சம் பேர் ஜியோபோனுக்காக முன்பதிவு செய்ததாக ஜியோ தெரிவித்தது. முன்பதிவு செய்தவர்களுக்கு, செப்டர் முதல்வாரத்தில் ஜியோ போன் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதிக டிமான்ட் காரணமாக செப்டம்பர் 21-ம் தேதிக்கு பின்னர் ஜியோபோன் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜியோபோன் டெலிவரி செய்வதில் இன்னும் தாமதம் ஏற்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன. அக்டேபர் 1-ம் தேதி டெரிவரி செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள, எனினும், அதற்காக தகுந்த காரணங்கள் உறுதிபடுத்தப்படவில்லை. இதனால், ஜியோபோனுக்கு முன்பதிவு செய்தவர்கள் இன்றும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது.
தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த ஜியோபோன்கள், முதலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், மற்றும் அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவாம். பின்னர், அங்கிருந்து ரிலையன்ஸ் சென்டர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிடல் ஸ்டோர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னரே வாடிக்கையாளர்கள் கைகளுக்கு சென்றனடையும் என்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஜியோபோன்
4ஜி வோல்ட்இ வசதிகொண்ட இந்த ஜியோபோன், ஃபீச்சர்போன் வகையில் அதிக சிறம்பம்சங்களை கொண்டதாகவே கருதப்படுகிறது. ஏனெனில், இந்த போனில் ஏற்கெனவே ஜியோ ஆப்ஸ் நிறுவப்பட்டு தான் இந்த ஜியோபோன் வெளிவருகிறது. ஜியோ சிம் மட்டுமே பொருத்தும் வகையில் இந்த தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற நிறுவனத்தின் சிம்-களை இதில் உபயோகிக்க முடியாது. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வாய்ஸ் கமென்ட்க்கு, பதில் அளிக்கும் வகையில் இந்த ஜியோபோன் உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
ரிலையன்ஸ் ஜியோபோன் முற்றிலும் இலவசம் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற போதிலும், பாதுகாப்பு தொகையாக முதலில் ரூ.1,500 செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த தொகையானது திரும்ப பெறக்கூடியது என்றும், 3 வருடங்களுக்குப் பின்னர் அந்த தொகை திருப்பக் கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவின் போது முதற்கட்டமாக ரூ.500 செலுத்த வேண்டும், பின்னர் ஜியோபோன் பெற்றுக்கொள்ளும்போது மீதமுள்ள தொகையான ரூ.1000 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ப்ளான்ஸ்
ரூ.153 என்ற விலையில் மாதாந்திர ப்ளான் அறிமும் செய்யப்பட்டது. அந்த ப்ளான்டி தினமும் 500 எம்.பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ், 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படும். இதேபோன்று வாராந்திர ப்ளான் மற்றும் இரண்டு நாட்களுக்கான ப்ளான் ஆகியவற்றையும் அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம். ரூ.54-க்கு வாராந்தி ப்ளானும், ரூ. 24-க்கு இரண்டு நாட்களுக்கான ப்ளானும் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான ப்ளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.