இந்தியாவில் ஒருவழியாக 5ஜி நெட்வொர்க் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தியுள்ளன.
இந்தப் பட்டியலில் ஓபோ, சாம்சங், ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன. இந்த நிறுவனங்களின் கே10 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் போன்கள் தற்போது சந்தைகளில் எளிதாக கிடைக்கின்றன.
1) ஓபோ கே10 5ஜி
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி Ram, 128GB வசதிகள் உள்ளன. இது தற்போது சந்தைகளில் ரூ.19,090க்கு கிடைக்கிறது. அமேசானில் 27 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.
போனில் 6.5 அங்குலம் ஹெச்.டி., திரை மற்றும் 48எம்.பி. கேமரா வசதியும் உள்ளது.
2) சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி
அமேசானில் இந்த ஸ்மார்ட்போன்கள் 35 சதவீதம் தள்ளுபடி விலையில் ரூ.16,999க்கு கிடைக்கின்றன. 8ஜிபி ரேம், 128ஜிபி வசதிகள் உள்ளன. 50எம்.பி., மெயின் கேமரா மற்றும் 6 ஆயிரம் எம்எஹெச் பேட்டரி வசதியும் உள்ளது.
3) மோட்டோரோலா மோட்டோ ஜி71 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 17 சதவீத தள்ளுபடியில் ரூ.18,990க்கு அமேசானில் கிடைக்கிறது.
4) போகோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி
அமேசானில் 27 சதவீத தள்ளுபடியில் ரூ.17,449க்கு இந்தப் போன்கள் கிடைக்கின்றன.
5)ஐக்யூஓஓ இசட்6 லைட் 5ஜி
முழுவதும் ஹெச்டி திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசானில் ரூ.15 ஆயிரத்து 499க்க கிடைக்கின்றன. போன் 5ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி வசதி கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“