/tamil-ie/media/media_files/uploads/2017/09/bsnl-offers.jpg)
பி.எஸ்.என்.எல் நிறுவனமானது தனது பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் பல்வேறு நிறுவனங்களும், தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு அதிரடியான ஆஃபர்களை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமானது தனது பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபரை வழங்குகிறது. அதன்படி ரூ.249-க்கு ரீசார்ச் கூப்பன் மூலம் வாஸ்ஸ் மற்றும் டேட்டா பயன்களை இலவசமாக பெற முடியும். ‘ப்ரொமோஷனர் எஸ்.டி.வி’(Promotional STV) என்று அறிவிக்கப்பட்டு இந்த ஆஃபரை பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. இந்த ஆஃபரில் பி.எஸ்.என்.எல் டு பி.எஸ்.என்.எல் அன்லிமிடெட் லோக்கல் கால்ஸ், மற்றும் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா ஆகியவற்றை 28 நாட்களுக்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபரானது வரும் 25-ம் தேதி வரையே என்பது கவனிக்கத்தக்கது.
#BSNL to #BSNL unlimited Local/STD calling and 1GB data per day for just Rs 249. pic.twitter.com/r8IzRaArYc
— BSNL India (@BSNLCorporate) September 15, 2017
பி.எஸ்.என்.எல் நிறுவனமானது மற்றொரு ஆஃபரையும் தனது பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதன்படி ரூ.429 ரிசார்ச் வவுச்சர் மூலம் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் கால்ஸ், நாள் தோறும் 1 ஜி.பி டேட்டா ஆகிவற்றை 90 நாட்கள் வேலிடிட்டியில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.