பி.எஸ்.என்.எல் நிறுவனமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு “பி.எஸ்.என்.எல் லக்ஷ்மி ஆஃபர்” அறிவித்துள்ளது. இந்த பி.எஸ்.என்.எல் லக்ஷ்மி ஆஃபர் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் டாக்டைம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.290, ரூ.390 மற்றும் ரூ.590 ஆகிய தொகைகளுக்கு ரீசார்ச் செய்யும் போது, முறையே ரூ.435, ரூ.585, ரூ.885 டாக்வேல்யுவை பெற முடியும்.
அக்டோபர் 16-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை “பி.எஸ்.என்.எல் லக்ஷ்மி ஆஃபர்” வழங்கப்படுகிறது. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் இயக்குநர் ஆர்.கே மிட்டல் கூறும்போது: பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர் தீபாவளி பண்டிகையை, மகிழ்சியாக கொண்டாடும் வகையில் இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
ரிலையன்ஸ் ஜியோ வருகையினால், ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபரை வழங்கிவருகின்றன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆஃபரை அறிவித்தது. அதன்படி பி.எஸ்.என்.எல்., தனது ப்ரிபெய்டு வாடிக்கையார்களுக்கு ‘ப்ளான் 429’ அறிவித்தது. அந்த ப்ளானில் அன்லிமிடெட் வாய்ஸ்கால்ஸ் மற்றும் நாள்தோறும் 1 ஜி.பி வீதம் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.