பி.எஸ்.என்.எல் மைக்ரோமேக்ஸ் கூட்டணி... ரூ.2,200-ல் ‘பாரத் 1’ 4ஜி ஃபீச்சர் போன்!

பி.எஸ்.என்.எல் நிறுவனமானது ‘பாரத் 1’(Bharat 1) 4ஜி வோல்ட்இ வசதியுடன் கூடிய ஃபீச்சர்போனை அறிமுகம் செய்துள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனமானது ‘பாரத் 1’(Bharat 1) 4ஜி வோல்ட்இ வசதியுடன் கூடிய ஃபீச்சர்போனை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனமானது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘பாரத் 1’(Bharat 1) ஃபீச்சர்போன் மூலமாக பி.எஸ்.என்.எல் மற்றும் மைக்ரோமேக்ஸ்  ஒன்றிணைந்து இந்தியாவில் உள்ள 500 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இலக்கு வைத்திருக்கிறது.

‘பாரத் 1’(Bharat 1) ஃபீச்சர்போனின் விலை ரூ.2200 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 4.2 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் ப்ராசஸர், டுயல் சிம் 4ஜி, 512 எம்.பி ரேம், 4ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. 2000mAh திறன் கொண்டுள்ளது. முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2 எம்.பி ரியர் கேமரா மற்றும் முன்புக்கத்தில் விஜிஏ குவாலிட்டி கேமரா உள்ளது. இந்த ‘பாரத் 1’(Bharat 1) ஃபிச்சர்போனானது முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பாரத் 1’(Bharat 1) போனில் பிம் ஆப் (BHIM) மற்றும் பி.எஸ்.என்.எல் ஆப்ஸ் போன்றவைகள் ப்ரீ-லோடு செய்யப்பட்டு வருகின்றன. ஃபீச்சர்போன் வாடிக்கையாளர்களை குறிவைத்து பி.எஸ்.என்.எல் களம் இறங்கியுள்ளதால், அதிரடி ஆஃபரையும் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா ஆகியவற்றை ரூ.97(மாத்திற்கு) என்ற ப்ளானில் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

‘பாரத் 1’(Bharat 1) ஃபீச்சர் போனில் மிகப்பெரிய ப்ளர் பாய்ண்ட் என்னவென்றால், இந்த போனில் மற்ற நெட்வொர்க் சிம்-களையும் பொருத்திக் கொள்ள முடியும். உதாரணமாக பி.எஸ்.என்.எல் சிம் தவிர்த்து ஏர்டெல் சிம் கூட அதில் பொருத்திக் கொள்ளலாம். ஆனால், ஜியோபோனை பொருத்தவலையில் ஜியோ சிம் மட்டுமே அதில் உபயோகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close