தற்போது ஸ்மார்ட் வாட்ச் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என அனைவரும் பயன்படுத்துகின்றனர். சாதாரண வாட்ச்யை விட அதிக வசதிகள், ஸ்டைல், டிரெண்டாக இருப்பதால் இளைஞர்களின் கவனம் பெற்றுள்ளது. ரூ.1 லட்சம் முதல் ரூ.1000 வரை என அனைத்து விலையிலும் ஸ்மார்ட் வாட்ச் கிடைக்கிறது. பிளப்கார்ட், அமேசான் என ஆன்லைன் தளங்களில் ஸ்மார்ட் வாட்ச் வாங்கலாம்.
இந்தநிலையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட் வாட்ச் வாங்கும் போது சில விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும். அது குறித்து இங்கு பார்ப்போம். முதலில் அது அந்த வாட்ச் எந்த நிறுவனம் , பிராண்ட் தரம் குறித்து பார்க்க வேண்டும். விலைக்கு ஏற்ற தேவையான அம்சங்கள் உள்ளதாக என்பதை பார்க்க வேண்டும். replace பாலிசி குறித்து பாருங்கள்.
ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட அம்சங்கள் ( health-centric) உள்ளதா என பாருங்கள். அதேசமயம் பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்சில் ஈசிஜி, பிபி சென்சார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் அடிப்படை health-centric வசதிகள் இருக்க வேண்டும். அதாவது, இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார் மற்றும் பெடோமீட்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இந்த அம்சங்களுடன், real-time heart rate measurement, ரத்த ஆக்ஸிஜன் செறிவூட்டல் அளவீடு மற்றும் ஸ்டெப் count போன்ற வசதிகள் இருக்க வேண்டும்.
மேலும், ஸ்போட்ஸ் மோட் வசதிகள் குறித்து பாருங்கள். தற்போது வரும் பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச்சில் GPS வசதி உள்ளது. ரூ. 3000கீழ் உள்ள வரும் ஸ்மார்ட் வாட்ச்களிலும் இது கிடைக்கிறது. இருப்பினும் GPS அதிக பேட்டரி பவர் செலவாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
4 சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச்கள்
Redmi Watch 2 Lite- ரூ. 2,499
பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச்கவாட்ச்கள் பட்டியலில் ரெட்மி வாட்ச் 2 லைட் முதலிடத்தில் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பல்வேறு நிறங்களில் வருகிறது. 2.5D கண்ணாடி பாதுகாப்புடன் 1.55-இன்ச் சதுர டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த வாட்ச்யில் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார் உள்ளது. தூக்கத்தை கண்காணிக்கும் சென்சார், மேலும் 100 வகையான ஸ்போட்ஸ் மோட் வசதிகள், GPS கண்காணிப்பு அமைப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது.
Amazfit Bip 3- ரூ. 1,999
இந்த நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் Xiaomiக்காக ஃபிட்னஸ் பேண்டுகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற பிராண்டாகும். Amazfit Bip 3 ஆனது ஒரு பெரிய 1.69-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் 5ATM water resistance மதிப்பிடப்பட்டது. கிரிக்கெட் உட்பட 60 விளையாட்டு முறைகளை ஆதரிக்கிறது. இதில் ஜிபிஎஸ் கண்காணிப்பு இல்லை என்றாலும், இது நம்பகமான இதய துடிப்பு சென்சாரை வழங்குகிறது.
boAt Xtend- ரூ. 1,799
boAt Xtend தற்போது அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் வாட்ச் ஆகும். 70,000 ரிவ்யூஸ், 4.2 ஸ்டார் ரேட்டிங் தரப்பட்டுள்ளது. boAt Xtend ஆனது 1.69 இன்ச் டிஸ்ப்ளே, rotatable crown வசதி உள்ளது. இது ஆப்பிள் வாட்ச் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இதிலும் ஜிபிஎஸ் வசதி இல்லை என்றாலும், இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார் மற்றும் built-in அமேசான் அலேக்சா வசதி உள்ளது, மற்ற வாட்ச்களைப் போல் அல்லாமல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் என 2 போன்களிலும் பயன்படுத்தலாம்.
Realme Smart Watch 2 Pro- ரூ. 2,984
இந்த ஸ்மார்ட்வாட்ச் Flipkart தளத்தில் கிடைக்கிறது. HD தரத்துடன் பெரிய 1.75-இன்ச் சதுர டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ரூ.3000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்வாட்ச்களில் இது சிறந்த வாட்ச் ஆகும். ஜிபிஎஸ் டிராக்கிங்கை ஆதரிக்கும் டூயல் செயற்கைக்கோள் குறைந்த பவர் வசதி ஆகியவை கொண்டுள்ளது. மேலும் இந்த வாட்ச் 9 நாட்கள் பேட்டரி லைப் ஆதரவு வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“