scorecardresearch

ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ மாதம் 8 டாலர்.. கூடுதல் சலுகைகள்.. எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Twitter will charge $8 for blue tick: ட்விட்டர் ப்ளூ டிக் வசதிக்கு மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என அந்நிறுவன சி.இ.ஓ எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ மாதம் 8 டாலர்.. கூடுதல் சலுகைகள்.. எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் தலைவர்கள், நட்சத்திரங்கள் எனப் பலர் பயன்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு மாதம் 8 அமெரிக்க டாலர், அதாவது ரூ. 661.24 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

ட்விட்டர் சமூகவலைதளத்தை டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். ட்விட்டர் உரிமையாளரான முதல் நாளே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் உள்பட 3 மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதோடு ட்விட்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ட்விட்டர், உலக முழுவதும் பயன்படுத்தும் பிரபல சமூகவலைதளமாகும். பல்வேறு நாட்டு தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். சமூகத்தின் மீதான கருத்துகள், தங்களது சொந்த கருத்துகள் என பலவற்றை அதில் பதிவிட்டு வருகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக அல்ல, கருத்து சுதந்திரம் வேண்டும் எனக் கூறி மஸ்க் 44 பில்லியன் டாலர் (ரூ.3.65 லட்சம் கோடி) ஒப்பந்தத்தை இறுதி செய்து ட்விட்டரை வாங்கினார்.

தற்போது ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் தலைவர்கள், பல துறையைச் சேர்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் அதை அங்கீகரித்து அவர்களுக்கு ப்ளூ டிக் வழங்குகிறது.

இந்நிலையில், ப்ளூ டிக் வசதிக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இனி ட்விட்டர் ப்ளூ டிக் வசதிக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ளூ டிக் வாங்கும் பிரபலங்களின் நாடுகளைப் பொறுத்து கட்டணம் வேறுபடும். ப்ளூ டிக் பயனர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும். பெயர் தேடல், பதில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நீண்ட வீடியோ, ஆடியோக்களை பதிவேற்ற அனுமதி வழங்கப்படும். விளம்பரங்கள் குறைப்பட்டு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ப்ளூ டிக் வசதிக்கு மாதம் 20 டாலர் (ரூ.1600) வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டது, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 8 டாலர் (ரூ. 661.24) வசூலிக்கப்பட உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Ceo elon musk says twitter will charge 8 american dollar for blue tick

Best of Express