Vikram Lander and Pragyan rover are in sleep Mode: இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் இரவு என்பதால் உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் சூரிய உதயம் வரும் போது திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் -3 வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு என்றும் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கியப் பின் அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்றும் ஆய்வு செய்து நிலவின் மர்மங்களை உலகுக்கு சொல்லியது. ஒரு நிலவு நாள் (14 பூமி நாட்கள்) லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த பின் நிலவில் இரவு தொடங்கும் முன் செப்டம்பர் 4-ம் தேதி லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் செப்.22 நிலவில் மீண்டும் சூரிய ஒளி கிடைக்கும் போது மீண்டும் செயல்படும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“