35 வயதான தொழில்நுட்பவியலாளர், கிரெக் முஷென். AI சாட்போட் ChatGPT உருவாக்கிய கொடுத்த உடற்பயிற்சி திட்டத்தைப் பின்பற்றி 3 மாதங்களில் 26 பவுண்டுகள் (11.8 கிலோ) எடை குறைத்துள்ளார். கேட்க சற்று ஆச்சரியமாக இருக்கலாம். சாட் ஜிபிடி பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இப்படியும் பயன்படுத்தலாம் என்பதை யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டோம்.
முஷேன் சாட் ஜிபிடி இணையத்திற்கு சென்று உடல் எடையை குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த விரும்புவதாக தேடியுள்ளார். இதற்கு பதிலளித்த ஏ.ஐ சார் ஜிபிடி ஆச்சரியம் அளிக்கும் வகையில், அவருக்கு திட்டங்களை வகுத்து கொடுத்தது. அதுவும் மிகவும் எளிமையான பயிற்சிகளை வழங்கியது. முன்பக்க கதவு அருகில் ஷு வைப்பது போன்ற சிறிய மற்றும் எளிமையான பயிற்சிகளை வழங்கியது. 3-ம் நாள் திட்டத்தில் ஜாக்கிங் ஓட சொல்லியது.
எளிமையான பயிற்சிகள்
சாட்ஜிபிடியின் ஃபிட்னஸ் திட்டத்தில் ஆரம்பத்தில் ஓடுவது போன்ற திட்டம் ஏதும் இல்லை. முதல் நாளில் அவர் தனது காலணிகளை முன் கதவுக்கு அடுத்ததாக வைக்க வேண்டும், இரண்டாவது நாளில் அவர் தனது காலெண்டரில் ஒரு ஓட்டத்தை திட்டமிட வேண்டும். அவரது முதல் சில ரன்னிங் அமர்வுகள் குறுகியதாகவும், அவரை சோர்வடையச் செய்யவில்லை என்றும் முஷேன் கூறினார்.
இதற்கு அடுத்து படிப்படியான பயிற்சிகளை சாட் ஜிபிடி வழங்கியுள்ளது. இது தனக்கு இலக்குகளை எளிமையாக எட்ட உதவியது என்று கூறினார். ஆழ்ந்த உரையாடல்களின் மூலம், உடற்பயிற்சி நடைமுறைகள், ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள் மற்றும் வாழ்க்கை முறை சரிசெய்தல் ஆகியவற்றை அது எடுத்துரைத்தது.
"நிலையான மற்றும் பயனுள்ள பயிற்சியை" வழங்குவதைத் தவிர, ChatGPT "ஊட்டச்சத்து பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும், சமச்சீர் உணவுத் திட்டங்கள், பகுதி கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் பற்றிய ஆலோசனைகளையும்" வழங்கியதாக முஷேன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“