மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஸ்மார்ட்போன் பயிற்சி முகாம்

பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்ததாகவும் இது போன்ற வகுப்புகளை வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே பெற்றோர்கள் எண்ணம்.

கலை தொடர்பான வகுப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் தர தவறுகிறோம். பள்ளிகளில் இதை தான் பயில வேண்டும் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து, கலையை பின்னுக்கு தள்ளி விடுகிறோம். அந்த கலையை முன்னுக்கு கொண்டு வந்து நம் மாணவர்களை அதில் ஆர்வம் கொள்ள செய்ய வேண்டும் என்பது தான் ‘Chennai Photo Biennale’  (CPB) என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் நோக்கம். CPB நிறுவனத்தின் இரண்டாவது சர்வதேசிய புகைப்பட கண்காட்சி வருகின்ற பிப்ரவரி 22ம் தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சி சென்னையில் பல இடங்களில் நடக்கிறது; இதற்கு உலகம் முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வர இருக்கின்றனர்.

“Chennai Photo Biennale என்கின்ற இந்த அமைப்பை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் தொடங்கினோம். நாங்கள் நடத்தும் கண்காட்சியில் உலகம் முழுவதுமிருந்து கலைஞர்கள் வந்து அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். சென்ற ஆண்டு முதல் நாங்கள் பள்ளி குழந்தைகளையும் இதில் பங்கேற்க வைக்க முடிவு செய்தோம், அதற்கு நாங்கள் சென்னையில் உள்ள பள்ளிகளை அணுகினோம், என்கிறார் புகைப்பட கலைஞர் மற்றும் Chennai CPB அமைப்பின் அறங்காவலர் காயத்ரி நாயர்.

குழந்தைகளுக்கு ஆரம்பத்திலே பெரிய கேமராக்களை வைத்து பாடம் சொல்லி தருவது சற்று கடினம். ஆதலால்; அன்றாடம் நாம் பயன்படுத்தும் மொபைல் கேமராக்களை வைத்தே பாடம் நடத்த முடிவு செய்தது அமைப்பு. 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கியது. சென்னையில் உள்ள பள்ளிகளில் இருந்து மொத்தம் 265 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள்; தனியார் பள்ளி மாணவர்கள் என்று அனைவரும் பங்கேற்றனர். அந்த மாணவர்களில் இருந்து 25 பேர் மேம்பட்ட பயிற்சிக்கு தேர்வாகினார்கள். அந்த மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. அந்த பயிற்சியில் புகைப்படத்தின் முக்கிய அம்சங்களான light, composition, framing, and portraiture ஆகியவை ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ஐபோன் XR மூலம் இலவசமாக கற்பிக்கப்பட்து.

மாணவர்களுக்கான புகைப்பட வகுப்புகள் பொதுவாக பகலில் தான் நடைபெறும் ஆனால் இந்த நிறுவனம், மாணவர்களுக்கு இரவில் புகைப்படங்கள் எவ்வாறு எடுக்க வேண்டும் என்று கற்றுத்தர நினைத்தது; அதற்காக அவர்களுக்கு தங்கும் வசதியையும் ஏற்படுத்தியது.

“மாணவர்களான கண்காட்சியை உருவாக்க நினைத்தோம். அதற்காக நாங்கள் பயிற்சி அளித்த மாணவர்களின் புகைப்படங்களையே உபயோக படுத்த நினணத்தோம். இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் அவர்களை கடற்கரைக்கு அழைத்து சென்றோம். காலை 5 மணிமுதல் பயிற்சி தொடங்கியது. மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப சப்ஜெக்ட்டை தேர்வு செய்ய அனுமதித்தோம்; அதில் அவர்களை மெருகேற்ற நினைத்தோம். அதை தவிர; இந்த பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் எண்ணூர்; தாம்பரம்; புழல் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தனர்; ஆதலால், நாங்கள் இந்த வகுப்பை தங்கி அவர்கள் பயிலும் வண்ணத்தில் வடிவமைத்தோம்,” என்கிறார் காயத்ரி.

Chennai Photo Biennale கண்காட்சியில் தாங்கள் எடுத்த புகைப்படங்கள் இடம்பெறுவது மகிழ்ச்சியாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். “நான் ஐபோன் பற்றி எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் முதன் முறையாக அதை பயன்படுத்தி, இரவில் போட்டோ எடுத்தேன்l இது ஒரு மகிழ்ச்சியான தருணம்,” என்று கூறி தன் அப்பாவி தனமான சிரிப்பை வெளிப்படுத்துகிறார் சென்னை அரசு பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் ரம்யா.

இந்த பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்ததாகவும் இது போன்ற வகுப்புகளை வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே  பெற்றோர்கள் எண்ணம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close