சீனாவின் Chang'e-6 சந்திர ஆய்வு விண்கலம் நிலவின் தென் துருவத்தின் தொலை தூரப் பகுதியில் இருந்து மண், பாறை மாதிரிகளை சேகரித்து மீண்டும் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன் விண்கலம் நிலவில் தரையிறங்கிய நிலையில் தனது நோக்கம், பணியை முடித்துக் கொண்டு விண்கலம் பூமிக்கு திரும்புகிறது.
இந்த வரலாற்றுச் சாதனையானது சந்திரனின் மர்மான தூரப் பக்கத்திலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் முதல் நாடாக சீனா உள்ளது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7:38 மணிக்கு (2338 GMT), ஜூன் 2-3-ம் தேதிகளில் சேகரித்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு பணியை முடித்து Chang'e-6 விண்கலம் நிலவில் இருந்து புறப்பட்டது.
இதுகுறித்து சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) கூறுகையில், "இந்த விண்லகம் நிலவின் தொலைதூரத்தில் அதிக வெப்பநிலையின் சோதனையைத் தாங்கிக் கொண்டது" என்பதை உறுதிப்படுத்தியது, மேலும் இது சில சிரமங்களை சந்தித்தாகவும் கூறியது.
இதற்கு முந்தைய திட்டமான Chang'e-5 போல் அல்லாமல் Chang'e-6 பூமியில் உள்ள தரை கட்டுபாட்டுடன் நேரடி தொடர்பு இல்லாமல் இயங்கியது. இந்தத் தடையைச் சமாளிக்க, ஏப்ரலில் ஏவப்பட்ட ரிலே செயற்கைக் கோளான Queqiao-2ஐ, தகவல்தொடர்புகளை எளிதாக்கும் வகையில், அனுப்பபட்டது.
விண்கலம் எப்படி மண் எடுத்தது?
டிரில் மற்றும் ரோபோ கை உதவியுடன் Chang'e-6 நிலவின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடியில் இருந்து மண் மாதிரிகளை தோண்டி எடுத்தது. பெய்ஜிங் டெய்லி அறிக்கையின்படி, மாதிரிகளை சேகரித்த பின் , விண்லகம் நிலவின் தொலைத் தூரப்பகுதியில் சீனாவின் தேசியக் கொடியை வைத்ததாக கூறியுள்ளது.
தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள Chang'e-6 விண்கலம் தற்போது மற்றொரு விண்கலனை சந்திக்கும். அதன் பின் மாதிரிகள் அடங்கிய தொகுதி இந்த விண்கலத்திற்கு மாற்றப்பட்டு பூமிக்கு அனுப்பபடும். இந்த விண்கலம் , தொகுதி, ஜூன் 25 ஆம் தேதி சீனாவின் உள் மங்கோலியா பகுதியில் திட்டமிடப்படி தரையிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“