Advertisment

சீனாவின் மெகா திட்டம்: அடுத்த 2 ஆண்டுகளில் மனித உருவ ரோபோக்களை அதிகளவில் உருவாக்க முடிவு

China humanoid robots plan: பல்வேறு பணிகளை செய்தும், மனிதர்களுடன் கலந்துரையாடக் கூடிய வகையில் சீனா மனித உருவ ரோபோக்களை உருவாக்க உள்ளது.

author-image
sangavi ramasamy
New Update
Robots.jpg

2025-ம் ஆண்டுக்குள் மனித உருவ ரோபோக்களை பெருமளவில் உற்பத்தி செய்யும் திட்டத்தை சீனா வெளியிட்டுள்ளது. பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய மற்றும் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய மனித உருவ ரோபோக்களை உருவாக்கி பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான ஒரு பெரிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (எம்.ஐ.ஐ.டி) கடந்த வாரம் ஒரு வரைபட ஆவணத்தை வெளியிட்டது. அதில் மனித உருவ ரோபோக்கள் உருவாக்கம் குறித்து அறிவித்துள்ளது. 

Advertisment

எம்.ஐ.ஐ.டியின் கூற்றுப்படி,  மனித உருவ ரோபோக்கள் 2025-ம் ஆண்டில்  "மேம்பட்ட நிலையை" எட்டும், அதற்குள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும். அமைச்சகம் அதன் ஆவணப் படத்தில் திட்டத்தின்  வளர்ச்சி இலக்குகளை கோடிட்டுக் காட்டியது, இது சீன ரோபாட்டிக்ஸ் நிறுவனங்களின் பங்குகளில் எழுச்சியைத் தூண்டியது.

சீனா அமெரிக்கா உடன்  போட்டியிடும் முயற்சியில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. சிப்ஸ் மற்றும் ஹார்டுவேர் துறையில் அமெரிக்காவின் டெஸ்லா மற்றும் பாஸ்டன் டைனமிக்ஸ் போன்ற  நிறுவனங்கள் முன்னணியில் இருக்கும் நிலையில் அதனுடன் போட்டியிடும் முயற்சியாக சீனா இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளரான சீனா, அடுத்த 2 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் உணர்தல், இயக்கக் கட்டுப்பாடு மற்றும் இயந்திரம்-மனிதன் தொடர்பு திறன் ஆகியவற்றில் முன்னேற்றங்களை அடைய இலக்கு வைத்துள்ளது.  

ரோபோட்டிக்ஸில் ஏ.ஐ பயன்படுத்துவதை அரசாங்கம் ஆதரிக்கிறது மற்றும் திறமையான ரோபோ கைகள், உடல் பாகங்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்து அழைப்பு விடுத்துள்ளது. 

மனிதர்களால் செய்யப்படும் வேலைகளை இந்த ரோபோக்கள் எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எ.கா மளிகைப் பொருட்கள் எடுத்து தருவது, அபாயகரமான சூழலில் வேலை செய்வது போன்ற பணிகளில் ரோபோக்கள் பணியமர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/tech-news-technology/china-plan-mass-produce-humanoid-robots-2025-9019915/

மனித வடிவிலான ரோபோக்களை பெருமளவில் உற்பத்தி செய்யும் நாடு சீனா மட்டுமல்ல. எடுத்துக்காட்டாக, அஜிலிட்டி ரோபோட்டிக்ஸ் எனப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரேகானில் ஒரு ரோபோ தொழிற்சாலையை தொடங்க உள்ளது, அங்கு அதன் நூற்றுக்கணக்கான இரு கால் ரோபோக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது, அவை நடக்க, குனிந்து மற்றும் பேக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும்.

மற்ற அமெரிக்க நிறுவனங்கள் டெஸ்லாவின் "ஆப்டிமஸ்" ரோபோ மற்றும் பாஸ்டன் டைனமிக்ஸின் அட்லஸ் ரோபோ போன்றவைகள் கவனிக்கத்தக்க வகையில் மனித உருவ ரோபோக்களை ஏற்கனவே உருவாக்கியுள்ளன. இதற்கிடையில், தென் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் குழுமம் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு $1.1 பில்லியன் ஒப்பந்தத்தில் வாங்கியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

China Robotics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment