Advertisment

வானத்தில் நிஷிமுரா வால் நட்சத்திரம்: எப்போது வருகிறது, எப்படி காண்பது?

இந்த வாரம் வானத்தில் நிஷிமுரா வால் நட்சத்திரம் தோன்ற உள்ளது. அதை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம்.

author-image
sangavi ramasamy
New Update
Comet Nishimura.jpg

வால் நட்சத்திரங்கள் கணிக்க முடியாத வானப் பொருள்கள் ஆகும். ஆனால் அவை மிகவும் அழகாக இருக்கும். இந்த வாரம் நிஷிமுரா வால் நட்சத்திரம் தோன்ற உள்ளது என நாசா தெரிவித்தது. அதன் சுற்றுப்பாதை செப்டம்பர் 12 அன்று பூமிக்கு நெருக்கமாக வரும். 125 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். 

Advertisment

வால் நட்சத்திரம் ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஒரு விண்வெளி வீரர் ஹிடியோ நிஷிமுராவால் கண்டுபிடிக்கப்பட்டது.  அவர் ஒரு  நிலையான டிஜிட்டல் கேமராவில் 30-வினாடி exposures பயன்படுத்தி இதைக் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த வால் நட்சத்திரம் அதிகாரப் பூர்வமாக C/2023 P1 நிஷிமுரா என்று அழைக்கப்படுகிறது. வால் நட்சத்திரம், உள் சூரிய குடும்பத்தில் அதன் பாதையில் முன்னோக்கிச் சென்றதால் பிரகாசம் அதிகரித்துள்ளது. வால் நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் கோணத்தில் இருப்பதால், அது தெரிந்தாலும் கூட, சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு முன் மட்டுமே நீங்கள் அதைக் காண முடியும்.

எர்த் ஸ்கை கூற்றுப் படி,  வால் நட்சத்திரம் தற்போது லியோ விண்மீன் தொகுப்பில் உள்ளது. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (ஜேபிஎல்) சுற்றுப்பாதைக் கணக்கீடுகள் வால் நட்சத்திரம் 435 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதைக் குறிக்கிறது.  செப்டம்பர் 12-ம் தேதி வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும் நாம் அதைக் காண முடியாது. நட்சத்திரத்தின் வெளிச்சம் கண்களை கூசும் என்பதால் அதை நம்மால் பார்க்க முடியாது.  

வால் நட்சத்திரம் என்றால் என்ன? 

இருப்பினும் எர்த் ஸ்கை கூறுகையில், இன்று (செப்டம்பர் 8) நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று கூறுகிறது. சூரியன் தோன்றும் முன் அல்லது சூரியன் மறைந்த பின் நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்று கூறுகிறது. இரவு வானத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பொருளாக கிழக்குப் பகுதியில் ஒரு பிறை நிலவு இருக்கும், அதைத் தொடர்ந்து அருகில் வீனஸ் இருக்கும். வால்மீன் லியோவின் சிக்கிலில் உள்ள அடாஃபெரா நட்சத்திரத்திற்கு அடுத்ததாக ஜோடிக்கு அருகில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 

வால் நட்சத்திரங்கள் என்பது சூரியனைச் சுற்றி வரும் உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசிகளின் அண்ட பனிப்பந்துகள் ஆகும். அவைகள் சூரிய குடும்பம் உருவான போது எஞ்சிய வானப் பொருட்கள் ஆகும். வால் நட்சத்திரங்கள்  சில கிலோமீட்டர் முதல் பத்து கிலோமீட்டர் வரை அகலம் கொண்டவை. இவை சூரியனுக்கு அருகில் சுற்றும் போது, ​​அவை வாயுக்கள் மற்றும் தூசிகளை வெளியேற்றுகின்றன, இதுவே வானத்தில் பிரபலமான வால்களை உருவாக்குகிறது.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment