விரைவில் இந்தியாவிலும் கூல்பேட் "கூல்ப்ளே 6" ஸ்மார்ட்போன்... டுயல் கேமரா, 4060mAh பேட்டரி!

கூல்பேடு நிறுவனத்தின் கூல்ப்ளே 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 , அமேசானில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரவுள்ளது

கூல்பேடு நிறுவனத்தின் கூல்ப்ளே 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

கூல்பேடு நிறுவனமானது கூல்ப்ளே 6 ஸ்மார்ட்போனை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற கூல்பேடு நிறுவனத்தின் நிகழ்ச்சி யொன்றில், கூல்ப்ளே 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ.14,999 என்றும், அமேசானில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 4-ம் தேதி முதல் கூல்ப்ளே 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்போதைய நிலையில், சியோமி, ஆப்போ மற்றும் விவோ போன்ற ஸ்மார்ட்போன்களின் சவாலை சந்திக்கும் வகையில், கூல்ப்ளே 6 ஸ்மார்போனில் விலை உள்ளது.

coolpad-coolplay6

கூல்பேடு கூல்ப்ளே 6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

  • 5.5 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்ப்ளே(ரிசொலூசன் 1920 x 1080 பிக்சல்ஸ்).
  • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 653 ப்ராசஸர்
  • 6 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்கேரா எஸ்.டி கார்டு மூலமாக ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்)
  • 4060mAh திறன் கொண்ட பேட்டரி திறன், கூல்ப்ளே 6-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 252 மணி நேரம் ஸ்டேண்ட்பை மற்றும் 6 மணி நேரம் தீவிரமாக கேம் விளையாட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • போனின் பிற்புற பகுதியில் ஃபின்கர்ப்ரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

இந்த கூல்ப்ளே 6 ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க சிறம்பம்சம் என்னவென்றால், எல்இடி ப்ளாஷ் லைட்டுடன் கூடிய, அதன் டுயல் ரியல் கேமராவை(13MP + 13MP) குறிப்பிடலாம். “பொக்கே மோடு” மூலமாக புகைபடம் எடுக்க மூடியும்.

8 எம்.பி கொண்ட செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. போனின் சிறப்பம்சங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது சுவாரஸ்யமானதாக இருக்கிறது. இந்த போன் செம்படம்பர் மாதம் இந்திய சந்தைக்கு வரும் நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close