Advertisment

பெயருக்கு ஏற்றவாறே வடிவமைப்பைப் பெற்ற கர்ட்டிஸீன் 'சைக்' பைக்... விலையோ ரூ. 20 லட்சம்!

Curtiss electric motor cycle Psyche launch : ஹார்லே டேவிட்சனின் லைவ்வயருக்கு நேரடியாக போட்டியில் களம் இறங்கும் இந்த பைக் 2021ல் விற்பனைக்கு வருகிறது

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Curtiss electric motor cycle Psyche specifications, price, launch, availability

Curtiss electric motor cycle Psyche specifications, price, launch, availability

Curtiss electric motor cycle Psyche specifications, price, launch, availability : இந்தியாவிற்கு தற்போது தான் எலக்ட்ரிக் பைக் முதல் கார்கள் வரை அதிக அளவில் அறிமுகமாகி வருகின்றன.  ஆனால் உலகின் பல்வேறு பாகங்களில் மிகவும் அதிக திறன் வாய்ந்த பைக்குகளை வெளியிட்டு அசத்தி வருகின்றனர் தலைசிறந்த நிறுவனங்கள்.

Advertisment

Curtiss electric motor cycle Psyche specifications, price, launch, availability

ஏற்கனவே ஹார்லி டேவிட்சனின் லைவ் வயர் அறிமுகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால் தற்போது கர்ட்டிஸ் (Curtiss) நிறுவனமும் தங்களுடைய புதிய பைக்கினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.  இந்த நிறுவனம் மிகவும் அசாத்தியமான வடிவங்களை கொண்ட பைக்குகளை சந்தைகளில் அறிமுகப்படுத்துவதை மிக முக்கியமான நோக்கமாக கொண்டிருக்கிறது.Curtiss electric motor cycle Psyche specifications, price, launch, availability

தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள பைக்கின் பெயரோ சைக். பேரைக் கேட்டாலே பைத்தியம் பிடிப்பது போலத்தான் இருக்கின்றது. பெயர் தான் அப்படி என்று பார்த்தால் பைக்கின் வடிவமைப்பும் அப்படி தான் இருக்கின்றது. பைக் மொழியில் சொல்ல வேண்டும் எனில் “பட்டி டிங்கரிங் பார்த்து அதன் தோலை உரித்து எலும்புக்கூட்டுடன் நிக்க வச்சா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்குது இந்த பைக்”.

மேலும் படிக்க : எலெக்ட்ரிக் காரின் பீஸ்ட் இது தான்… 2000PS பவரில் இயங்கும் ஹைப்பர்கார் ஒரு பார்வை

இதற்கு முன்பு இந்நிறுவனத்தில்  வெளியான மற்ற பைக்குகளோடு இதனை ஒப்பீடு செய்கையில் இந்த பைக்கின் விலை கொஞ்சம் குறைச்சல் தான்.  இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஜெயூஸ் (Zeus) பைக்கின் விலை நாற்பத்தி ஒரு லட்சம் ரூபாய். அமெரிக்காவின் டாலர் மதிப்பில் 60 ஆயிரம் டாலர்கள்.  ஆனால் இந்த சைக்கின் விலையோ வெறும் 30 ஆயிரம் டாலர்கள்.  அதாவது 20 லட்சம் ரூபாய் மட்டுமே.

Curtiss Motorcycle Zeus, Curtiss electric motor cycle psyche கர்ட்டிஸ் நிறுவனத்தின் ஜீயூஸ் ரக பைக்

இந்த நிமிடம் வரை இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் எதுவுமே வெளியாகவில்லை. டார்க் ரேட், பவர் அவுட்புட் என எதைப்பற்றியும் இதுவரை அறிவிக்காத நிறுவனம் நேரடியாக ஹார்லி டேவிட்சனின் லைவ் வயருக்கு போட்டியாக களமிறக்குகிறது கர்ட்டிஸ் நிறுவனம்.  36 அல்லது 72 கிலோ வாட்ஸ் பேட்டரியில் இந்த பைக்குகள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Curtiss Motorcycle Zeus, Curtiss electric motor cycle psyche கர்ட்டிஸ் நிறுவனத்தின் ஜீயூஸ் போப்பர் ரக பைக்

லைவ் வயர் பைக் உலகமெங்கும் விற்பனைக்கு வரும் என்று முன்பே அறிவித்துவிட்டது அந்நிறுவனம். ஆனால் கர்ட்டிஸின் இந்த பைக் உலக சந்தையில் விற்பனைக்கு வருமா என்பது கேள்விக்குறி தான் ! இருந்தாலும் 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் இந்த பைக் விற்பனைக்கு வைக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : பைக் ரேஸ்க்கு அழைக்கும் டி.வி.எஸ். சவாலுக்கு நீங்கள் தயாரா?

Harley Davidson's LiveWire  Vs Curtiss's Psyche

Curtiss electric motor cycle Psyche specifications, price, launch, availability Psyche Vs LiveWire

Automobile
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment