/indian-express-tamil/media/media_files/Yz7TGaTqHcwSxoaZGps4.jpg)
This image of the asteroid Dinkinesh and its satellite was taken 6 minutes after Lucy's close approach. (NASA)
டிங்கினேஷ் என்ற சிறுகோள் ஏற்கனவே ஒருமுறை நாசாவின் லூசி மிஷன் அதைக் கடந்தபோது வானியலாளர்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு சிறுகோள் என்று நினைத்த போது அது இரண்டு சிறுகோள்களின் பைனரி அமைப்பாக மாறியது.
இந்நிலையில் சிறுகோள் மற்றொரு ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் பைனரி அமைப்பாக 2 சிறுகோள் அல்லாது டிங்கினேஷ் மொத்தம் மூன்று வெவ்வேறு விண்வெளி பாறைகள், 3 சிறுகோள்களை கொண்டுள்ளது.
தொடர்பு பைனரி என்பது ஒன்றையொன்று தொடும் இரண்டு சிறிய தனித்தனி பொருள்களைக் குறிக்கிறது. லூசி விண்கலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட டிங்கினேஷின் முதல் படங்களில், தொடர்பு பைனரியின் இரண்டு பகுதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக இருந்தது. இதன் பொருள் அங்கு ஒரே ஒரு "சந்திரன்" இருப்பது போல் இருந்தது. லூசி குழு அதிகமான படங்களை டவுன்லிங்க் செய்த பிறகு, சில நிமிடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டது, அது உண்மையில் மற்றொரு தொடர்பு பைனரி என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
லூசி பணியானது வியாழன் ட்ரோஜன் சிறுகோள்களை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது. ட்ரோஜன்கள் என்பது வியாழனின் சுற்றுப் பாதையில் இரண்டு "திரள்களில்" பயணிக்கும் சிறுகோள்களின் குழுவாகும்.
ஆங்கிலத்தில் படிக்க:https://indianexpress.com/article/technology/science/dinkinesh-nasa-lucy-mission-9018791/
ஒரு திரள் வாயு ராட்சதத்தை அதன் சுற்றுப்பாதையில் வழிநடத்துகிறது, மற்றொன்று கிரகத்தைப் பின்தொடர்கிறது. செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப் பாதைகளுக்கு இடையில் உள்ள முக்கிய சிறுகோள் பெல்ட்டில் உள்ள டிங்கினேஷுடனான சந்திப்பு ஜனவரி 2023-ல் மட்டுமே சேர்க்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.