/tamil-ie/media/media_files/uploads/2017/10/1apple-iphone-8-main.jpg)
தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான மக்கள் ஷாப்பிங் செய்வது வாடிக்கையானது. இதைனை கருத்தில் கொண்டு பிரபல ஆன்லைன் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்டு, ஸ்னாப்டீல் ஆகியவை ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி விற்பனையை அறிவித்து வருகின்றன. பண்டிககை காலங்களில், போட்டி போட்டுக்கொண்டு இதுபோன் ஆன்லைன் வணிகதளங்கள் தள்ளுபடி விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக, முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான விலைக்குறைப்பு இருப்பதை காணமுடியும். தள்ளுபடி விற்பனை மட்டுமல்லாமல் இ.ம்.ஐ, ஃபை-பேக் ஆஃபர் உள்ளிட்ட பல்வேறு விதமான ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. பண்டிகை காலங்களில் பணத்தை மிச்சப்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்க முடியும். ஆனால், பெஸ்ட் டீல் மூலமாக தான் ஸ்மார்ட்போன் வாங்கினீர்கள் என உறுதியாக கூறமுடியுமா? அப்படி ஒருவேளை நீங்கள் எது பெஸ்ட் டீல் என தெரிந்து கொள்ள விரும்பினால், பின்வருபவை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
இயங்கு தளம்: ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ்?
ஆண்ட்ராய்டு
கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் தற்போது முன்னணியில் உள்ளது. பல்வேறு வகையான டிசைன், ஸ்கிரீன் சைஸ், சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம். உங்களுக்கு பிடித்தமான ஹேன்ட் செட்டை வாங்குவாற்கு ஆண்ட்ராய்டு ஹெல்ப்ஃபுல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆண்ட்ராய்டின் 8.0 இயங்கு தளத்தில், புதிய வசதிகள் மற்றும் சார்ப்ஃவேர் மேம்பாட்டினை அதிகரிக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்திருந்தது. தற்பாதைய நிலையில், கூகிள் பிக்சல் மற்றும் சோனி எக்ஸ்பீரியா XZ1 ஆகியவை ஆண்ட்ராய்டு ஓரியோவை கொண்டு வருகின்றன. பெரும்பாலான மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 அல்து ஆண்ட்ராய் 6.0 மார்ஸ்மெலோவில் இயங்கக் கூடியது என்பது கவனிக்கத்தக்கது.
ஐஓஎஸ்
ஆண்ட்ராய்டு போல ஐஓஎஸ் ஆதிக்கம் செலுத்தவில்லை என்ற போதிலும், மிகவும் பாதுகாப்பு நிறைந்த இயங்கு தளமாகும். ஆப்பிள் நிறுவனத்தில் இயங்கு தளமான ஐஓஎஸ், அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன், ஐபேட் போன்றவற்றிற்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு சாய்ஸ் இருப்பதை காண முடியும் என்ற நிலையில், ஐஓஎஸ் யூசர்-ஃப்ரண்ட்லி என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிவற்றிற்கு தனித்தனியே ஆப்ஸ்-ஸ்டோர் இருக்கின்றன. ஆப்பிள் ஐஓஎஸ்-க்கான ஆப்-ஸ்டோரைக் காட்டிலும், ஆண்ட்ராய்டு கூகிள் பிளே ஸ்டோரில் அதிக ஆப்ஸ் உள்ளன. எனினும், குவாலிட்டியை ஒப்பிடும்போது, ஆண்ட்ராய்டு கூகிள் ப்ளே ஸ்டோரை காட்டிலும், ஐபோன் ஆப்-ஸ்டோர் மேம்பட்டதாகும்.
ஸ்கிரீன் சைஸ்
தற்போதைய கால கட்டத்தில் பெரிய ஸ்கிரீன் சைஸ் உள்ள ஸ்மார்ட்போன் வாங்குவதே ட்ரெண்டாக இருந்து வருகிறது. எனினும், சிறிய ஸ்கிரீனை கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பிடும் படியாக 4.7 இன்ச் கொண்ட ஐபோன் 7 மற்றும் 5 இன்ச் கொண்ட கூகிள் பிக்சல் போன்றவற்றை உதாரணமாக கூறலாம். இவை இரண்டுமே கைக்கடக்கமான பவல்புஃல்லான ஸ்மார்ட்போன்கள் தான்.
இதேபோல, ஐபோன் 7 ப்ளஸ் மற்றும் பிக்சல் எக்ஸ்.எல் போன்ற ஸ்மார்ட்போன்கள், படம் பார்ப்பதற்கும், ஈ-புக் படிப்பதற்கும் ஏற்றதாக இருக்கும். எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்களின் வருகையானது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஐபோன் எக்ஸ், கேலக்ஸி 8, கேலக்ஸி நோட் 8, ஹானர் 9ஐ, மற்றும் எல்.ஜி ஜி6 உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களில் பெரிய டிஸ்ப்ளே உள்ளது. குறிப்பாக போனின் சைஸை பெரிதுபடுத்தாமல், ஸ்கிரீனின் சைஸை மட்டும் அதிகரிப்பது பேஷன்.
டிஸ்ப்ளே குவாலிட்டி
ஸ்மார்ட்போன் வாங்கப்போகும்போது அதன் டிஸ்ப்ளே ரிசொலூசனையும் அரிந்து கொள்வது அவசியமானது. டிஸ்ப்ளேவின் கலர் குவாலிட்டி மற்றும் வியூவிங் ஆங்கிள்ஸ் போன்றவறவை முக்கியமானது. எனவே, பொதுவாக போன் வாங்க செல்கிறோம் என்றால், சூரிய வெளிச்சத்தில் ப்ரைட்னஸை அதிரித்துக் கொண்டு ஏதேனும் படிக்க முடிகிறதா என்பதை சோதனை செய்து வாங்க வேண்டும். AMOLED டிஸ்ப்ளே மற்றும் எச்.டி.ஆர் டிஸ்பிளே போன்ற சிறம்பம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளிவருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
மிட்-என்ட் போன் என்றால் அதன் ரிசொலூசன் என்ன என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது. புஃல் எச்.டி (1920 x 1080) என்பதை தேர்வு செய்ய வேண்டுமே தவிர எச்.டி (720) என்பதனை தேர்வு செய்யக் கூடாது. மிட்-என்ட் ஸ்மார்ட்போன்களில், சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும் என குறிப்பிட்டுச் சொல்லலாம். ஹை-என்ட் ஸ்மார்ட்போன்களை பார்க்கும்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் குவாட் எச்.டி (2560 x 1440) ரிசொலூசனை கொண்டிருக்கின்றன. சோனி எக்ஸ்பீரியா XZ போன்ற சில ஸ்மார்ட்போன்களே 4k ரிசொலூசனை கொண்டிருக்கின்றன.
டிசைன்
டிசைன் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கலாம். எனினும் கிளாஸ் டிசைன் மற்றும் மெட்டல் டிசைன் குறித்து பார்க்கலாம். பிளாஸ்டிக் பாடி கொண்ட தரமான போன்கள் குறைந்த விலையில் இருக்கத்தான் செய்கின்றன. எனினும், மெட்டல் டிசைன் போன்களை வாங்குவது சிறந்ததாக இருக்கும். மெட்டல் டிசைன் போன்களை பொறுத்தவரையில் மோட்டோ ஜி5எஸ், சியோமி எம்.ஐ ஏ1, நோக்கியா 6, மற்றும் ஹானர் 9ஐ போன்றவை யுனிபாடி மெட்டர் கேஸசை கொண்டிருக்கின்றன.
இதேபோல, மின்-என்ட் போன்களில் கிளாஸ் டிசைனும் இருக்கத்தான் செய்கின்றன. மிட்-என்ட் ரேஞ்ச் என்பதால் அதற்கான சாய்ஸ் என்பது குறைவாக தான் இருக்கின்றன. அதன்படி ஹானர்8 மற்றும் ஆசஸ் சென்போன் 3 ஆகியவை மிட்-என்ட்-ல் வருகின்றன.
பட்ஜெட்டை அதிகரிக்கும்பட்சத்தில், IP68 ரேட்டிங் கொண்ட போன்களை வாங்க முடியும். இது போன்ற போன்கள் நீடித்து உழைக்கக்கூடியது என்பதோடு வாட்டர் ரசிஸ்டன்ட் தன்மையை பெற்றிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் ஆப்பில் 8 ப்ளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் தன்மையை பெற்றிருகின்றன.
கேமரா
மெகா பிக்சல்(எம்.பி) என்பது கேமராவின் குவாலிட்டியை குறிப்பிடுகிறது. எனவே, முடிந்தால் ஸ்மார்ட்போன் வாங்கும் முன்னரே கேமரா குறித்து சோதனை செய்து கொள்ளவது சிறந்தது. ஐபோன் 7 ப்ளஸ் கேமராவானது சாம்சங் கேலக்ஸி எஸ்7 போன்று இல்லை என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
மிட்ரேஞ்ச் வகைகளில் எடுத்துக் கொண்டால், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கேமரா சிறப்பம்சம் திருப்திகரமாக இல்லாதிருக்கும். தற்போது அந்த நிலை மாறி வருகிறது என்று கூறப்படுகிறது. எனினும், டுயல் ரியல் கேமராவை கொண்டுள்ள சியோமி எம்.ஐ ஏ1 சிறந்த ஃபெர்மான்சை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
ப்ராசஸர்
ஒரு போனின் செயல்பாடு என்பது அதன் பிராசஸரை கொண்டு தான் அமைந்திருக்கும். ஒருவேளை ரூ.30,000 மதிப்பில் நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்திருந்தால் அந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸர் உள்ளதாக என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸரானது கேம்ஸ், விர்சுயல் ரியாலிட்டி, பேட்டரி திறளை மேம்படுத்துதல் போன்றவற்றை கொண்டிருக்கும். நோக்கியா 8, ஒன்ப்ளஸ்5, சியோமி எம்.ஐ மிக்ஸ் 2, சோனி எக்ஸ்பீரியா XZ1, எச்.டி.சி யு11 போன்ற ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸரை கொண்டிருக்கின்றன.
ஸ்னாப்டிராகன் 600 சீரியசானது மிட்-என்ட் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ், சியோமி எம்.ஐ மேக்ஸ் 2 போன்றவற்றில் உள்ளது. ஸ்னாப்டிராகன் 600 சீரியசில் அதிகபட்ட ஃபெர்மார்மன்ஸை எதிர்பார்க்க முடியாது என்ற போதிலும், சராசரியான செயல்பாட்டை கொண்டிருக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏ11 பையோனிக் ஐபோன் எக்ஸ், ஐபோன் 8 ஐபோன் 8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் விரைவில் வரவுள்ளது. இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் மிக சமீபத்திய அட்வான்ஸ்டு சிப்-செட் ஆகும்.
சாம்சங் மற்றும் ஹவாய் போன்ற நிறுவனங்கள் பிரத்யேக சிப்-செட் மூலமாக அந்நிறுவனங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மற்றும் ஹானர் 8 புரோ போன்ற ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன.
ரேம், ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்.டி சப்போர்ட்
பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் போது ரேம் என்பது மிக முக்கியமானதாகும். குறிப்பாக ஸ்மார்ட்போனானது 2 ஜி.பி ரேம் கொண்ப்பது அவசியமாகும். அதிக கேம்ஸ் விளையாடுபவர்கள் குறைந்தபட்சம் 3ஜி.பி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்ய வேண்டும். தற்போதைய நிலையில், ரூ.10000 மதிப்புக்கு உள்ளாகவே 3 ஜி.பி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.கொஞ்சம் பட்ஜெட்டை அதிகப்படுத்தினால், அதாவது ரூ.15,000 மதிப்புக்கு பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும். அவ்வாறு பட்ஜெட்டை அதிகரித்தால், பல்வேறு ஸ்மார்ட்போன்கள் 4ஜி.பி ரேம்-ல் கிடைக்கின்றன. ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் 6 ஜி.பி அல்லது 8 ஜி.பி ரேம் என வழங்குகின்றன.
மியூசிக் ஸ்டோரேஜ், ஆப்ஸ், கேம்ஸ் மற்றும் வீடியோ ஆகிவற்றிற்கு குறைந்த பட்சம் 32 ஜி.பி ஸ்டோரேஜ் என்பது அவசியமாகும். 16 ஜி.பி ஸ்டேரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்குவதை தவிர்த்து விடலாம். மைக்ரோ எஸ்.டி கார்டு பொருத்திக் கொள்ளும் வசதி என்பது முக்கியத்துவமானது. எனினும், எஸ்.டி கார்டு வசதி என்பது ஐபோன்களுக்கு இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
பேட்டரி மற்றும் ஃபிண்கர் பிரிண்ட் ஸ்கேனர்
என்னதான் ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு பேட்டரி திறன் அவசியமல்லவா. எனவே, ஸ்மார்ட்போன் வாங்கும் முன்னர் அதன் பேட்டரி திறன் குறித்து தெரிந்து கொண்டு வாங்குவது என்பது சிறந்ததாகும். தற்போதைய நிலையில், மூன்று நாட்களுக்கு சார்ஜை தேக்கி வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் கூட சந்தையில் கிடைக்கின்றன. எனவே, ஒரு நாளாவது முழுமையாக சார்ஜ் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் 2800mAh என்ற குறைந்த பட்ச பேட்டரி திறனையாவது கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஃபிண்கர்பிரிண்ட் என்பது தற்போது வெளிவரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது, இந்த ஃபிண்கர்பிண்ட் ஸ்கேனர் மூலம் போனை அன்லாக் செய்வது மட்டுமல்லாமல், பே-மென்ட் செலுத்தும் போதும் அங்கீகரிக்கப் பயன்படுகிறது.
விலை
விலைக்கு தகுந்த ஸ்மார்போனை வாங்குகிறோமா என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். ரூ.3000-ல் இருந்து ரு.86,000 (ஐபோன் 8 ப்ளஸ் )வரை பல்வேறு ஸ்மார்போன்கள் உள்ளன. அடுத்த மாதம் ஐபோன் எக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.102,000 என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலானோர் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் விலைக்கு ஏற்ற சிறப்பம்சத்தை கொண்டிருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். இதேபோல, ஒன்ப்ளஸ் 5, ஹானர் 8 போன்ற ஸ்மார்ட்போன்களும் நல்ல மதிப்பீட்டை பெற்றிருக்கின்றன. எனவே, விலைக்கு தகுந்தாற் போல ஸ்மார்ட்போன்களை வாங்கலாமே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.