ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா? "ஆம்", "வேண்டாம்" எனக் கேட்டு எலான் மஸ்க் ட்விட்டரில் நேற்று (திங்களன்று) வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின் முடிவில் பெரும்பாலான பயனர்கள் மஸ்க் பதவி விலக்க வேண்டும் ஆம் என வாக்களித்துள்ளனர்.
57.5% பயனர்கள் "ஆம்" என வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில் 42.5% பேர் "வேண்டாம்", நீங்களே சி.இ.ஓ பதவியில் தொடரலாம் என வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 17.5 மில்லியன் பயனர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.
வாக்கெடுப்புக்கு முன் பயனர்களின் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக மஸ்க் கூறியிருந்தார். அதே நேரத்தில் முடிவுகள் ஆம் பதவிவிலக வேண்டும் என்று வந்தால் தாம் எப்போது பதவி விலகுவார் என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
இந்த மாத தொடக்கத்தில் எலான் மஸ்க் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார். ட்விட்டர் நிறுவனத்தை பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். ட்விட்டர் உரிமையாளரானது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் பணி நீக்கம். ப்ளு டிக் வசதிக்கு சந்தா என பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.
இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் வருகிறது. இந்நிலையில் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.