ட்விட்டர் சமூகவலைதளத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணிநீக்கம் தொடங்கி ட்விட்டர் பெயர் மாற்றம் என பலவற்றை மேற்கொண்டுள்ளார். அந்த வரிசையில் தற்போது லிங்க்ட்இன் (LinkedIn) தளத்திற்குப் போட்டியாக X தளத்திலும் புதிய வசதி கொண்டு வர உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
X பயனர் ஒருவர் லிங்க்ட்இன்-ஐ விட மோசமானது எதுவும் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பி போஸ்ட் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "சில நேரங்களில் மக்கள் எனக்கு லிங்க்ட்இன் லிங்க் அனுப்புவார்கள். ஆனால் அங்கு கிரிஞ் லெவல் அதிகம். அதனால் என்னால் அதைப் பயன்படுத்த முடியவில்லை.
அப்போது அவர்களிடம் விண்ணப்பத்தை அல்லது பயோ விவரங்களை இ-மெயில் அனுப்புமாறு கேட்டுக் கொள்வேன். லிங்க்ட்இனுக்கான X போட்டியாளர் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று கூறினார்.
முன்பே அறிமுகம்?
எனினும் இந்த அம்சம் சில காலமாக செயல்பாட்டில் உள்ளது போல் தெரிகிறது. ஒர்க்வீக் நிறுவனத்தில் சி.இ.ஓ ஆடம் ரியான் ட்வீட் செய்கையில், எங்கள் நிறுவனம் X தளத்தில் வேலை வாய்ப்புகளை போஸ்ட் செய்வதற்கான அணுகலைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 20க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு எடுத்துள்ளதாகவும் அவர் தெரித்தார்.
பிசினஸ் பயனர்கள் (கோல்டன் செக்மார்க்) வைத்துள்ள நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை போஸ்ட் செய்ய முடியும் எனத் தெரிகிறது. எனினும் இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்னும் கூறப்படுகிறது.
மேலும், டேட்டிங் ஆப் வசதி, பேமண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்களும் X தளத்தில் கொண்டு வர எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 'X - the everything app' ஆக மாற்றும் அவரின் திட்டத்தில் இதுவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”