உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ப்ரைவஸி ஆப்ஷனில் புதிய அப்டேட்டை தரவுள்ளது.
தொழில்நுட்ப உலகில், நம்பர் 1 சமூகவலைத்தளமாக திகழும் பேஸ்புக் செயலியின் பயனாளர்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். அதற்கேற்ப ஃபேஸ்புக் செயலியும் புதிய புதிய அப்டேட் வசதிகளுடன் வளர்ச்சியடைந்துக் கொண்டே வருகிறது. பேஸ்புக்கின் இந்த புதுமையால் தான், பயனாளர்கள் இன்று வரை பேஸ்புக்கை தவிர மற்ற எந்த செயலியின் மீது அதிக ஈடுபாட்டை காட்டுவதில்லை என்கின்றன பல ஆய்வின் முடிவுகள். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில், நியூஸ்ஃபிட் பக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக அறிவித்திருந்தது.
இதன்படி, பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். இனிவரும் காலங்களில் நியூஸ்ஃபிட் பக்கத்தில் புதிய மாற்றங்கள் பல நிகழ இருப்பதாகவும், செய்தி நிறுவனங்களில் அதிகப்படியான வீடியோக்கள் மற்றும் தேவையற்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. மார்க்கின் இந்த அறிவிப்புக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
தற்போது ஃபேஸ்புக்கின் ப்ரைவஸி ஆப்ஷனிலும் புதிய அப்பேட் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பேஸ்புக் வெர்ஷனில், பயனாளர்கள் பதிவிடும் ஃபோட்டோக்கள், செய்திகள், கருத்துகள் ஆகியவற்றை மற்றவர்கள் பார்த்துக் கொள்ளலாம். அதே நேரத்தில், பயனாளர்கள் தங்களின் விருப்பமான நண்பர்கள் மட்டும் குறிப்பிட்ட வீடியோக்கள், புகைப்படங்களை பார்த்தால் போதும் என தேர்வு செய்யும் வசதியும் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தனித்தனியாக பிரிந்து இருக்கும் இந்த வசதிகள் ஒன்றாக இணைந்து ப்ரைவஸி பக்கத்தில் தனியாக இடம்பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் விளம்பரங்களை தனித்து காட்டுவது போன்ற அப்டேட்டும் விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பாக பேஸ்புக்கை பயன்படுத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும், அவர்களின் புகைப்படங்கள் மற்ற விபரங்கள் தவறான செயலுக்கு பயன்படுத்துவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செட்டிங்கை எவ்வாறு பயன்படுத்துவது குறித்த விரிவாக்கம் , சில நாட்களில் பேஸ்புக்கின் நியூஸ் ஃபிட் பக்கத்தில், வீடியோவாக இடம்பெறும் என்பது கூடுதல் தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.